மருத்துவர் முடிச்சு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மருத்துவர் முடிச்சு (Surgeon's knot) என்பது பாய்ச்சுருக்கு முடிச்சுக்கு (reef knot) எளிமையான திருத்தம் செய்து உருவாக்கப்பட்டது. இதில் முதல் தடம் போடும்போது கூடுதலாக இன்னொரு முறுக்குச் சேர்க்கப்படுவதன்மூலம் இரட்டை நுனி முடிச்சு ஏற்படுத்தப்படுகிறது. இதனால் உராய்வு கூடுதலாக்கப்பட்டு முடிச்சின் பாதுகாப்பு மேம்படுத்தப்படுகிறது.[1] வெட்டுமிடங்களில் தையல் போடும்போது கூடுதலாக இடுவை தேவைப்பட்டால், அறுவை மருத்துவர்கள் இம் முடிச்சைப் பயன்படுத்துவர். இதனாலேயே இம் முடிச்சுக்கு இப்பெயர் ஏற்பட்டது. மருத்துவத்தில் மட்டுமன்றி வீச்சுத் தூண்டில் மீன்பிடித்தலிலும் இந்த முடிச்சுப் பயன்படுகின்றது.[2]

"மருத்துவர் முடிச்சு" ஒரு தொடுப்பு முடிச்சாகவும் பயன்படும் என்பதால் இதனை ஒரு தொடுப்பு முடிச்சாகச் சிலர் வகைப்படுத்துகின்றனர். அணிகலன்களின் உற்பத்தியில் இதனைத் தொடுப்பு முடிச்சாகப் பயன்படுத்துகின்றனர்.
Remove ads
மேற்கோள்கள்
இவற்றையும் பார்க்கவும்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads