மலாக்கா ஆளுநர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மலாக்கா ஆளுநர் அல்லது யாங் டி பெர்துவா மலாக்கா (ஆங்கிலம்: Malacca Governor; மலாய்: Yang di-Pertua Negeri of Malacca) என்பவர் மலேசிய மாநிலமான மலாக்கா மாநிலத்தின் ஆளுநர் எனும் அரசத் தலைவர் ஆவார். இவரை மாண்புமிகு (ஆங்கிலம்: His Excellency; மலாய்: Tuan Yang Terutama (TYT) எனும் மரியாதை அடைமொழியில் அழைப்பது வழக்கம்.
மலாக்கா மாநிலத்தின் தற்போதைய ஆளுநர் அலி ருஸ்தாம் (Ali Rustam). இவர் 2020 ஜூன் 4-ஆம் தேதி பதவியேற்றார்.
Remove ads
பொது
யாங் டி பெர்துவா நெகிரி (ஆங்கிலம்: Yang di-Pertua Negeri; மலாய்: Yang di-Pertua Negeri) என்பவர் மலேசிய மாநிலங்களான பினாங்கு, மலாக்கா, சபா, சரவாக் ஆகிய மாநிலங்களின் ஆளுநரைக் குறிப்பிடும் பதவி.
இந்தப் பதவி நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை மலேசிய மாமன்னர் யாங் டி பெர்துவான் அகோங் அவர்களால் நியமிக்கப்படும் பதவி ஆகும். அந்தந்த மாநிலங்களின் ஆளுநர்களின் சம்மதத்தைப் பெற்ற பின்னர், யாங் டி பெர்துவா நெகிரி நியமிக்கப் படுகிறார்கள்.[1]
Remove ads
நிர்வாகம்
மாநிலச் சட்டமன்றத்தில் யாங் டி பெர்துவா நெகிரியின் முக்கியமான செயல்பாடுகள்:
- பெரும்பான்மை பெற்ற பிரதான கட்சியின் தலைவரை முதலமைச்சராக (ஆங்கிலம்: Ketua Menteri; மலாய்: Chief Minister) நியமிப்பது;
- மாநிலத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்களை (Executive Council) நியமிப்பது; (சபா மற்றும் சரவாக் மாநிலங்களில் அமைச்சரவை (Cabinet) என அழைக்கப்படுகிறது);
- மாநில அரசாங்கத்தின் துறைத் தலைவர்களை நியமிப்பது;
- மாநிலச் சட்டமன்றம் கலைக்கப் படுவதற்கு ஒப்புதல் அளிப்பது;
- மாநிலச் சட்டமன்றம் கலைக்கப் படுதலைத் தடுத்து நிறுத்துவது;
- அரச விருதுகள்; அரச பதக்கங்கள் வழங்குவது;
- மாநிலத்தில் செய்யப்பட்ட குற்றங்களுக்கு மன்னிப்பு வழங்குவது; (இந்தக் குற்றங்களில் இராணுவக் குற்றங்கள் மற்றும் சிரியா குற்றங்களுக்கு யாங் டி பெர்துவான் அகோங் மட்டுமே மன்னிப்பு வழங்க இயலும்).
Remove ads
மலாக்கா யாங் டி பெர்துவா பட்டியல்
1957-ஆம் ஆண்டு தொடங்கி 2021-ஆம் ஆண்டு வரையிலான மலாக்கா மாநிலத்தின் யாங் டி பெர்துவா பட்டியல்:[2] (2022 ஆகஸ்டு மாதம், இற்றை செய்யப்பட்டது.)
மேற்கோள்கள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads