மலாக்கா சுல்தானகம்

From Wikipedia, the free encyclopedia

மலாக்கா சுல்தானகம்
Remove ads

மலாக்கா சுல்தானகம் (மலாய் மொழி: Kesultanan Melaka; ஆங்கிலம்: Sultanate of Malacca; ஜாவி: کسلطانن ملاک); என்பது பரமேசுவரா எனும் சிங்கப்பூர் அரசரால் 1400-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட ஒரு சுல்தானகம் ஆகும். பரமேசுவரா என்பவர் இசுகந்தர் ஷா என்றும் அழைக்கப் படுகிறார்.[1]

விரைவான உண்மைகள் மலாக்கா சுல்தானகம்Malacca Sultanateكسلطانن ملايو ملاك, தலைநகரம் ...

15-ஆம் நூற்றாண்டில், மலாக்கா சுல்தானகத்தின் அதிகார உச்சத்தில், தீபகற்ப மலேசியாவின் பெரும்பகுதிகளும்; ரியாவ் தீவுகளும் உள்ளடக்கியதாக இருந்தது. அதன் காலத்தில் மிக முக்கியமான கடல்சார் துறைமுகங்களில் ஒன்றாகவும் விளங்கியது.[2]

பரபரப்பான பன்னாட்டு வர்த்தக துறைமுகமாகவும்; இஸ்லாமிய கற்றல் மற்றும் பரப்புதலுக்கான மையமாகவும் உருவெடுத்தது. மேலும் மலாய் மொழி, இலக்கியம் மற்றும் கலைகளின் வளர்ச்சிக்கும் ஊக்கமளித்தது.[3]

Remove ads

பொது

1511-ஆம் ஆண்டில், மலாக்காவின் தலைநகரம் போர்த்துகீசியப் பேரரசிடம் வீழ்ந்தது. மலாக்கா சுல்தானகத்தின் கடைசி சுல்தான் மகமுட் ஷா (1488 - 1511) மலாக்காவை விட்டு வெளியேறினார்.

அதன் பின்னர் அவரின் சந்ததியினர் ஜொகூர் சுல்தானகம் மற்றும் பேராக் சுல்தானகம் ஆகிய இரு புதிய சுல்தானகங்களை நிறுவினார்கள்.[4]

தாய்லாந்திற்கு கீழும் சுமாத்திராவிற்கு மேலேயும் உள்ள இடைப்பட்ட நிலத்தில் மலாக்கா சுல்தானகம் பரவியிருந்தது. இதன் தலைநகரத்தில் போர்த்துகீசியர் 1511-ஆம் ஆண்டில் படையெடுத்தனர். இதன் பின்னர் சுல்தான் மகமுட் ஷாவின் இரண்டாவது மகனார், அலாவுதீன் ரியாட் ஷா II என்பவரால் ஜொகூர் சுல்தானகம் நிறுவப்பட்டது.

Remove ads

மலாக்கா சுல்தான்கள்

மலாக்கா சுல்தான்கள் ஆட்சிக்காலம்

மலாக்கா சுல்தான்கள்ஆட்சி காலம்
பரமேசுவரா
1400–1414
மெகாட் இசுகந்தர் ஷா
1414–1424
சுல்தான் முகமது ஷா
1424–1444
பரமேசுவரா தேவ ஷா
1444–1446
சுல்தான் முசபர் ஷா
1446–1459
சுல்தான் மன்சூர் ஷா
1459–1477
சுல்தான் அலாவுதீன் ரியாட் ஷா
1477–1488
சுல்தான் மகமுட் ஷா
1488–1511
சுல்தான் அகமட் ஷா
1511–1513
சுல்தான் மகமுட் ஷா
1513–1528

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads