மலேசிய உயர்க் கல்வி அமைச்சு

From Wikipedia, the free encyclopedia

மலேசிய உயர்க் கல்வி அமைச்சுmap
Remove ads

மலேசிய உயர்க் கல்வி அமைச்சு (மலாய்: Kementerian Pendidikan Tinggi; ஆங்கிலம்: Ministry of Higher Education) (MOHE) என்பது மலேசியாவின் உயர்க் கல்வித்துறையை நிர்வகிக்கும் மலேசிய அரசாங்க அமைச்சுகளில் ஒன்றாகும். இந்த அமைச்சின் தலைமையகம் புத்ராஜெயா (Putrajaya) மத்திய அரசாங்க நிர்வாக மையத்தில் (Federal Government Administrative Centre) உள்ளது.

விரைவான உண்மைகள் துறை மேலோட்டம், அமைப்பு ...

உயர்க்கல்வி (Higher Education), பல்தொழில் பயிற்சிப்பள்ளி (Polytechnic), சமூகக் கல்லூரி (Community College), மாணவர்கள் கடன் (Students Loan), தரநிர்ணய மதிப்பளித்தல் (Accreditation), தன்னார்வ மாணவர்கள் (Students Volunteer) ஆகியவற்றிற்கு இந்த அமைச்சு பொறுப்பு வகிக்கிறது.

Remove ads

பொது

இந்த மலேசிய உயர்க் கல்வி அமைச்சு முதன்முதலில் 27 மார்ச் 2004-இல் உருவாக்கப்பட்டது, 14 மே 2013-இல் மீண்டும் மலேசிய கல்வி அமைச்சுடன் (Ministry of Education Malaysia) இணைக்கப்பட்டது. பின்னர் 28 ஜூலை 2015-இல் சீர்திருத்தம் செய்யப்பட்டது.

2018 மலேசியப் பொதுத் தேர்தலுக்கு பிறகு, மலேசிய உயர்க் கல்வி அமைச்சு, மலேசிய கல்வி அமைச்சின் கீழ் ஓர் உயர் கல்விப் பிரிவாக மாறியது. மலேசியப் பிரதமர் முகிதீன் யாசின் (Muhyiddin Yassin) அமைச்சரவையில், உயர்கல்விப் பிரிவு மீண்டும் கல்வி அமைச்சில் இருந்து பிரிக்கப்பட்டு 10 மார்ச் 2020 முதல், தனி ஓர் அமைச்சாக உருவாக்கப்பட்டது.

Remove ads

பொறுப்பு துறைகள்

  • கல்வி முறை (Education System)
  • பாடநூல்கள் (Textbooks)
  • மொழிக் கொள்கை (Language Policy)
  • மொழிப் பெயர்ப்பு (Translation)
  • உயர்க்கல்வி (Higher Education)
  • பல்தொழில் பயிற்சிப்பள்ளி (Polytechnic)
  • சமூகக் கல்லூரி (Community College)
  • மாணவர்கள் கடன் (Students Loan)
  • தரநிர்ணய மதிப்பளித்தல் (Accreditation)
  • தன்னார்வ மாணவர்கள் (Students Volunteer)

அமைப்பு

  • உயர் கல்வி அமைச்சர்
    • உயர்கல்வி துணை அமைச்சர்
      • பொது செயலாளர்
        • பொதுச்செயலாளரின் அதிகாரத்தின் கீழ்
        • துணைப் பொதுச் செயலாளர் (வளர்ச்சி) (Development)
        • துணைப் பொதுச் செயலாளர் (மேலாண்மை) (Management)

துறைகள்

  • உயர்கல்வித் துறை
    • (Department of Higher Education)
    • (Jabatan Pendidikan Tinggi) (JPT)
      • (Director General: Dr. Siti Hamisah Binti Tapsir)
  • பல்தொழில் பயிற்சிப்பள்ளி துறை
    • (Department of Polytechnic Education)
    • (Jabatan Pengajian Politeknik) (JPP)
      • (Director General: Datuk Hj Mohlis Bin Jaafar)
  • சமூகக் கல்லூரி துறை
    • (Department of Community Colleges)
    • (Jabatan Pengajian Kolej Komuniti) (JPKK)
      • (Director General: Asc. Prof. Kamarudin Kasim)
  • மலேசியர் தகுதிகள் நிறுவனம்
    • (Malaysian Qualifications Agency) (MQA)
    • (Agensi Kelayakan Malaysia)
  • தேசிய உயர் கல்வி நிதி நிறுவனம்
    • (National Higher Education Fund Corporation)
    • (Perbadanan Tabung Pendidikan Tinggi Nasional) (PTPTN)[2]
  • துங்கு அப்துல் ரகுமான் அறக்கட்டளை
    • (Tunku Abdul Rahman Foundation)
    • (Yayasan Tunku Abdul Rahman)[3]
  • மாணவர் தன்னார்வ அறக்கட்டளை
    • (Student Volunteers Foundation)
    • (Yayasan Sukarelawan Siswa) (YSS)[4]
  • பொது பல்கலைக்கழகங்கள்
    • (Public Universities)
    • (Universiti Awam)
Remove ads

கூட்டரசு துறைகள்

Remove ads

கூட்டரசு நிறுவனங்கள்

Remove ads

மேற்கோள்கள்

மேலும் காண்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads