மலேசிய தோட்டத் தொழில் மற்றும் மூலப் பொருட்கள் அமைச்சு

From Wikipedia, the free encyclopedia

மலேசிய தோட்டத் தொழில் மற்றும் மூலப் பொருட்கள் அமைச்சுmap
Remove ads

மலேசிய தோட்டத் தொழில் மற்றும் மூலப் பொருட்கள் அமைச்சு (மலாய்: Kementerian Perladangan dan Komoditi; ஆங்கிலம்: Ministry of Plantation and Commodities) என்பது மலேசியாவின் முக்கிய மூலப் பொருட்களான செம்பனை (Palm Oil), இரப்பர் (Rubber), காட்டு மரங்கள் (Timber), தளபாட மரப் பொருட்கள் (Furniture), கொக்கோ (Cocoa), மிளகு (Pepper), புளிச்சக்கீரை (Kenaf), புகையிலை (Tobacco) போன்றவற்றின் வளர்ச்சியை மேற்பார்வையிடும் மலேசிய அரசாங்கத்தின் அமைச்சு ஆகும்.[4]

விரைவான உண்மைகள் அமைச்சு மேலோட்டம், அமைப்பு ...

இந்த அமைச்சு 2022-ஆம் ஆண்டில் அதன் பெயர் மாற்றப் படுவதற்கு முன்னர் மலேசிய தோட்ட கைத்தொழில் மற்றும் பொருட்கள் அமைச்சு (Ministry of Plantation Industries and Commodity) (MPIC) என அறியப்பட்டது.

Remove ads

பொது

கடந்த 50 ஆண்டுகளாக மலேசிய நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தோட்டம் மற்றும் மூலப் பொருட்கள் துறை கணிசமான பங்களிப்பை வழங்கி உள்ளது. அப்போது இருந்து, இந்தத் துறை மலேசியாவின் முக்கிய ஏற்றுமதித் துறைகளில் ஒன்றாக மாறியுள்ளது.

2012-ஆம் ஆண்டில் ஏற்றுமதிப் பொருட்கள் மற்றும் அவை சார்ந்த தயாரிப்புகளின் (Commodity-based Products) ஏற்றுமதி மதிப்பு (Exports Values) MYR 127.5 பில்லியன் ஆகும். இது நாட்டின் மொத்த ஏற்றுமதி வருவாயில் 18.2 விழுக்காடாக இருந்தது.

முதன்மை தொழில்துறை அமைச்சு

  • 2012-ஆம் ஆண்டில்

தோட்ட தொழில்துறை மற்றும் மூலப்பொருட்கள் அமைச்சு (ஆங்கிலம்: Ministry of Plantation Industry and Commodities; மலாய்: Kementerian Perusahaan Perladangan dan Komoditi) என்று இருந்த அமைச்சின் பெயர், தோட்டத் தொழில்கள் மற்றும் பொருட்கள் அமைச்சு (Ministry of Plantation Industries and Commodities) (MPIC) என மறுபெயரிடப்பட்டது.

  • 2018-ஆம் ஆண்டில்

முதன்மை தொழில்துறை அமைச்சு (Ministry of Primary Industries) (MPI) என மாற்றப்பட்டது.

  • 2020-ஆம் ஆண்டில்

தோட்ட தொழில்துறை மற்றும் மூலப்பொருட்கள் அமைச்சு (Ministry of Plantation Industries and Commodities) என மறுபெயரிடப்பட்டது.

Remove ads

அமைப்பு

  • அமைச்சர்
    • துணை அமைச்சர் (I)
    • துணை அமைச்சர் (II)
      • பொது செயலாளர்
          • சட்ட ஆலோசனை (Legal Advisory)
          • உள் தணிக்கை பிரிவு (Internal Audit Division)
          • பெரு நிறுவன தொடர்பு பிரிவுCorporate Communication Unit)
          • ஒழுங்கமைவு பிரிவு (Integrity Unit)
        • துணைப் பொதுச் செயலாளர் (தோட்டம் மற்றும் பொருட்கள்)
          • செம்பனை மற்றும் சவ்வரிசி தொழில் வளர்ச்சி பிரிவு (Palm Oil and Sago Industry Development Division)
          • மரம், புகையிலை மற்றும் புளிச்சக்கீரை தொழில்கள் மேம்பாட்டு பிரிவு (Palm Oil and Sago Industry Development Division)
          • ரப்பர் மற்றும் காட்டு ஆமணக்கு தொழில் வளர்ச்சி பிரிவு (Rubber and Jatropha Industry Development Division)
          • கொக்கோ மற்றும் மிளகு தொழில் வளர்ச்சி பிரிவு (Cocoa and Pepper Industry Development Division)
          • உயிரிய எரிபொருள் பிரிவு (Biofuel Division)
        • துணை பொதுச் செயலாளர் (உத்திசார் திட்டமிடல் மற்றும் மேலாண்மை)
          • உத்திசார் திட்டமிடல் மற்றும் பன்னாட்டு பிரிவு (Strategic Planning and International Division)
          • புத்தாக்க ஊக்குவிப்பு மற்றும் தொழில்துறை மனித மூலதனப் பிரிவு (Innovation Promotion and Industrial Human Capital Division)
          • நிர்வாகம், மேம்பாடு மற்றும் நிதி மேலாண்மை பிரிவு (Administration, Development and Financial Management Division)
          • மனித வள மேலாண்மை பிரிவு (Human Resource Management Division)
          • தகவல் மேலாண்மை பிரிவு (Information Management Division)
Remove ads

கூட்டரசு நிறுவனங்கள்

  • மலேசிய செம்பனை வாரியம்
  • மலேசிய ரப்பர் வாரியம்
  • மலேசிய மரத் தொழில் வாரியம்
  • மலேசிய கொக்கோ வாரியம்
  • மலேசிய மிளகு வாரியம்
  • மலேசிய செம்பனை சான்றளிப்பு மன்றம்
  • மலேசிய செம்பனை மன்றம்
    • (Malaysian Palm Oil Council) (MPOC)
    • (Majlis Minyak Sawit Malaysia)
  • மலேசிய ரப்பர் ஏற்றுமதி ஊக்குவிப்பு மன்றம்
  • மலேசிய கட்டுமரங்கள் மன்றம்
  • மலேசிய காட்டுமரங்கள் சான்றளிப்பு மன்றம்

மேற்கோள்கள்

மேலும் காண்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads