மலேசிய பொதுச் சேவைகள் ஆணையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மலேசிய பொதுச் சேவைகள் ஆணையம் (மலாய்: Suruhanjaya Perkhidmatan Awam Malaysia (SPA); ஆங்கிலம்: Public Services Commission of Malaysia) (PSC); என்பது மலேசிய நடுவண் அரசு சார்ந்த பொதுச் சேவைகளின் (Public Services of Malaysia's Federal Government) பொது நிர்வாகத்திற்குப் பொறுப்பு வகிக்கும் ஆணையம் ஆகும்.[1]
இந்த ஆணையம் மலேசிய அரசியலமைப்பு பிரிவு 139-இன் (Article 139 of the Constitution of Malaysia) மூலம் நிறுவப்பட்டது.[2]
மலேசிய அரசாங்கம் அல்லது மலேசிய நடுவண் அரசின் பொதுச் சேவைகளில் (Federal Civil Service) பணிபுரியும் அனைத்து உறுப்பினர்களின் நடத்தைகள் (Conducts) தொடர்பான விதிமுறைகளையும்; மற்றும் ஒழுங்கு முறைகளையும் (Rules and Regulations) இந்த ஆணையம் தீர்மானக்கிறது.
Remove ads
பொது
மலேசிய பொதுச் சேவைகளில் உள்ள பெரும்பாலான உறுப்பினர்களை நியமிக்கவும்; பணிநீக்கம் செய்யவும் மலேசிய பொதுச் சேவைகள் ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது.
மலேசிய மாமன்னர் (King of Malaysia) நியமித்த சிறப்புப் பதவிகளுக்கான (Designated Special Posts) அதிகாரிகள் குறித்து மலேசிய மாமன்னருக்கு ஆலோசனை வழங்கும் உரிமையும் இந்த ஆணையத்திற்கு உண்டு.
மலேசிய மாமன்னர்
மலேசிய அரசியலமைப்பு பிரிவு 139(4)-இல் (Article 139(4) of the Federal Constitution) குறிப்பிடப் பட்டதற்கு இணங்க; மலேசிய பொதுச் சேவைகள் ஆணையத்தின் தலைவர் மற்றும் பிற உறுப்பினர்களை; மலேசிய மாமன்னர் (Yang di-Pertuan Agong); அவரின் விருப்பத்திற்கு இணங்க நியமிக்க இயலும்.
Remove ads
மேற்கோள்கள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads


