மாதவன் (விஷ்ணு)
விக்கிமீடியப் பக்கவழி நெறிப்படுத்தல் பக்கம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மாதவன் (Madhava) (சமக்கிருதம்: माधव) விஷ்ணுவின் ஆயிரம் பெயர்களில் ஒன்றாகும். விஷ்ணு சகஸ்ரநாமத்தில் மாதவன் எனும் பெயர், 72, 167 மற்றும் 735-வதாக வருகிறது. மேலும் மகாபாரதத்தில், ஸ்ரீகிருஷ்ணரை மாதவன் என அருச்சுனன் அழைக்கிறான்.
பகவத் கீதையின் முதல் அத்தியாயம், 36வது சுலோகத்தில், மகாலட்சுமியின் கணவரான மாதவனே என விளித்து, போர்க் களத்தில் எதிரில் நிற்கும் நம் உறவினர்களையும், குருமார்களையும் கொல்வதால் என்ன பயன்? என விஷ்ணுவின் அவதாரமான கிருஷ்ணரை நோக்கி அருச்சுனன் கேட்கிறான். (Bhagavad-Gita 1.36)
Remove ads
பெயர்க் காரணம்
அனைத்து நிதிகளின் அதிபதி என்பதாலும், மது எனும் அரக்கனை கொன்றதாலும் விஷ்ணுவிற்கு மாதவன் எனப் பெயராயிற்று.[1]

மாதவன் என்பதற்கு மகாலட்சுமியை மணந்தவர் என்றும், மது வித்தையின் மூலம் அறியத் தக்கவன் எனவும், ஆதிசங்கரர் தனது விஷ்ணு சஹஸ்ரநாமத்திற்கான விளக்க உரையில் குறிப்பிட்டுள்ளார்.
பண்டைக் காலம் முதல் ஒடிசாவில் மாதவனுக்கு நீல-மாதவன், இராதா-மாதவன், துர்கா-மாதவன் போன்ற பெயர்களில் வழிபாடுகள் இருந்து வருகிறது.
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads