மாதா-உது

From Wikipedia, the free encyclopedia

மாதா-உது
Remove ads

மாதா-உது  (Mata-Utu) என்பது வலிசும் புட்டூனாவும் பிரதேசத்தின் தலைநகரம் ஆகும். இது பிரான்சின் நிருவாகப் பிரிவுகளில் ஒன்றாகும். இது உவியா தீவினில் அமைந்துள்ள ஹஹெக் மாவட்டத்தில் அமைந்துள்ளது. 2003 ஆம் சனத்தொகைக் கணக்கெடுப்பிற்கு அமைவாக இந்நகரின் மொத்த மக்கள் சனத்தொகை 1,191 ஆகும். நாட்டில் அமைந்துள்ள இரு துறைமுகங்களில் இந்நகரில் ஒன்று அமைந்துள்ளது.[1] ஹிஹிஃபோ விமான நிலையமே இந்நகரினதும் நாட்டினதும் விமான நிலையம் ஆகும். இந்நகரிலிருந்து 5. 6 கிலோமீற்றர்கள் தொலைவில் ஹிஹிஃபோ விமானநிலையம் அமைந்துள்ளது.

விரைவான உண்மைகள் மாதா-உது Matāʻutu, நாடு ...

இங்குள்ள மிகவும் குறிப்பிடத்தக்க இடங்கள் மாதா-உது பெருங்கோவில் மற்றும் மாளிகை ஆகிவையாகும்.

Remove ads

புவியியல்

வலிசு தீவுகளின் மிகப்பெரிய நகர மையம் இந்நகரமேயாகும். வலிசு தீவுக்கூட்டத்தின் பெரும்பாலன பகுதிகளை இந்நகரம் உள்ளடக்கியுள்ளது. இந்நகரின் மொத்தப் பரப்பளவு 60 சதுரகிலோமீற்றர்கள் ஆகும். இந்நகரம் முருகைக் கற்பாறைகளினால் சூழப்பட்டுள்ளது. வலிசு தீவுகளின் நிருவாக தலைமையகமும் வர்த்தகத் தலைமையகமும் இந்நகரமேயாகும்.[2] இந்நகரம் பல சிறு தீவுகளையும் உள்ளடக்கியுள்ளது. அச்சிறு தீவுகளில் பல கப்பல்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன.[3][4]

Remove ads

காலநிலை

மேலதிகத் தகவல்கள் தட்பவெப்ப நிலைத் தகவல், MATA-UTU, WALLIS AND FUTUNA, மாதம் ...
Remove ads

பொருளாதாரம்

இங்கு அண்ணளவாக 7,000 ஆடுகளும் 25,000 பன்றிகளின் மக்களின் வாழ்வாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக வளர்க்கப்படுகின்றன.

சேவைகள்

வலிசும் புட்டூனாவும் பிரதேசத்தின் மாவட்ட நீதிமன்றம் இந்நகரிலேயே அமைந்துள்ளது. [6] வலிசு எட் புடுனா எனும் வானிலியும் இங்கு ஒலிபரப்பப்பட்டு வருகின்றது. [7]

கலாசாரம்

தூய கன்னி மரியாவின் விண்ணேற்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகத்து 15 அன்று இங்குள்ள மக்களால் கொண்டாடப்படுகின்றது.[8] உவியன் மொழி, பொலினீசியன் மொழி, டொன்க்கன் மொழி ஆகியவையும் நிருவாக நடவடிக்கைகளுக்காகப் பிரெஞ்சு மொழியும் பயன்படுத்தப்படுகின்றது. இந்நகரில் பயன்படுத்தப்படும் நாணயம் சிஃப்பி ஃபிராக் (CFP franc) ஆகும்.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads