மார்கஸ் ட்ரஸ்கொதிக்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மார்கஸ் ட்ரஸ்கொதிக் (Marcus Trescothick, பிறப்பு: திசம்பர் 25 1975), இங்கிலாந்து அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் 76 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 123 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளி லும் 279 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 339 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2000 - 2006 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

விரைவான உண்மைகள் தனிப்பட்ட தகவல்கள், முழுப்பெயர் ...

ஒரு இடது கை துவக்க மட்டையாளரான , இவர் 1993 இல் சோமர்செட்டுக்காக முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார். ட்ரெஸ்கோதிக் தனது ஒருநாள் சர்வதேச (ஒருநாள்) போட்டியை ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, ஜூலை 2000 இல் ஜிம்பாப்வேக்கு எதிராக அறிமுகமானார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக ஆகஸ்ட் மாதத்தில் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இவர் அறிமுகமானார்[1] முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் உசேன் ட்ரெஸ்கோதிக்கினை கிரஹாம் கூச்சுடன் ஒப்பிட்டார்.[1]

இருபதுக்கு 20 துடுப்பாட்டத்தில் மிக வேகமாக அரைநூறுகள் எடுத்த இங்கிலாந்து வீரர் எனும் சாதனையையும் படைத்துள்ளார். [2] ட்ரெஸ்கோதிக் ஒரு திறமையான களத்தடுப்பாளர் மற்றும் வலது கை விரைவு வீச்சாளர் ஆவார். இவர் ஐந்து ஒருநாள் போட்டிகளில் இழப்புக் கவனிப்பாளராக விளையாடியுள்ளார். [3] இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளுக்கும் ,பத்து ஒருநாள் போட்டிகளுக்கும் இங்கிலாந்து அணியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

Remove ads

ஆரம்பகால வாழ்க்கை

மார்கஸ் எட்வர்ட் ட்ரெஸ்கோதிக் 25 டிசம்பர் 1975 அன்று சோமர்செட்டின் கீன்ஷாமில் பிறந்தார். [4] மார்ட்டின் மற்றும் லிண்டா ட்ரெஸ்கோதிக் ஆகியோருக்கு பிறந்த இரண்டு குழந்தைகளில் இவர் இளையவர் ஆவார். இவரது சகோதரி அண்ணா இவரை விட மூன்று வயது மூத்தவர் ஆவார். [5] இவரது தந்தை ஒரு சிறந்த தொழில்முறை அல்லாத துடுப்பாட்ட வீரர் ஆவார். சோமர்செட் கவுண்டி துடுப்பாட்ட சங்கத்திற்காக இவர் இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ளார் . 1967 மற்றும் 1976 க்கு இடையில் பிரிஸ்டல் மற்றும் மாவட்ட துடுப்பாட்ட சங்கத்திற்காக இவர் விளையாடியுள்ளார்.[6] [7] ட்ரெஸ்கோதிக் சிறு வயதிலிருந்தே துடுப்பாட்டத்தில் ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார். இவர் பிறந்த போது இவரின் தந்தை இந்தக் குழந்தை வளரும்போது ஒரு துடுப்பாட்ட வீரராக ஆவதற்கு இவருக்கு எல்லா ஊக்கமும் அளிக்கப்படும் எனக் கூறினார். மேலும் இவர் பதினொரு மாதத்தில் தனது முதல் துடுப்பாட்ட மட்டையைப் பெற்றார். [5] செயின்ட் அன்னே ஆரம்ப பள்ளியில் பயின்ற காலத்தில், 11 வயதுக்குட்பட்ட பள்ளி துடுப்பாட்ட அணிக்காக இவர் விளையாடத் தேர்வு செய்யப்பட்டார். இவர் டேவன் துடுப்பாட்ட அணிக்கு எதிராக தனது முதல் நூறு ஓட்டங்களை எடுத்தார். அந்தப் போட்டியில் இவர் 124 ஓட்டங்களை எடுத்தார்.க்ளூசெஸ்டர்ஷைர் கவுண்டி துடுப்பாட்ட கிளப் இவரை 11 வயதுக்குட்பட்ட அணிக்காக விளையாட அழைத்தது. அந்த அணிக்காக, சோமர்செட்டுக்கு எதிராக இவர் நூறு ஓட்டங்களை எடுத்தார்.

பிரிஸ்டலுக்கு அருகிலுள்ள ஓல்ட்லேண்ட் காமனில் உள்ள சர் பெர்னார்ட் லோவெல் பள்ளியில் பயின்றார். [8] 14 ஆம் வயதில் அவர் வெஸ்டர்ன் லீக்கில் கெய்ன்ஷாமிற்காக தனது தந்தையுடன் துடுப்பாட்டம் விளையாடினார். [9] அதே நேரத்தில், அவர் 14 வயதிற்குட்பட்ட இங்கிலாந்து அணிக்காக எதிர்கால சர்வதேச அணி வீரர்களான ஆண்ட்ரூ பிளின்டாஃப் மற்றும் பால் கோலிங்வுட் ஆகியோருடன் விளையாட தேர்வு செய்யப்பட்டார். தனது சுயசரிதையான, கம்மிங் பேக் டு மீ என்பதில் ட்ரெஸ்கோதிக், தனது வயதில் இருந்த மற்ற சிறுவர்களை விட உயரமானவனாக இருந்தேன் என்பதை நினைவு கூர்ந்தார், இது அவருக்கு ஒரு பலத்தை அளித்தது, மேலும் பந்தை மற்றவர்களை விடவும் கடினமாக அடிக்க அவருக்கு உதவியது.[10]

Remove ads

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads