மிராண்டா (நிலா)

யுரேனஸின் துணைக்கோள் From Wikipedia, the free encyclopedia

மிராண்டா (நிலா)
Remove ads

மிராண்டா (Miranda), அல்லது யுரேனசு V (Uranus V), என்பது யுரேனசின் ஐந்து  முக்கிய துணைக்கோள் களுள் மிகச்சிறியதும் மற்றும் உள்ளார்ந்ததாகவும்  உள்ளது. இது பிப்ரவரி 16, 1948 அன்று  மெக்டொனால்ட் வானியல்  நோக்ககத்திலிருந்து  ஜெரார்ட் குய்ப்பரால் கண்டுபிடிக்கப்பட்டதாகும். வில்லியம் ஷேக்ஸ்பியரின் நாடகமான த டெம்பெஸ்டில் இருந்து மிராண்டா என்ற பெயரை யெடுத்து இதற்கு வைத்துள்ளனர். யுரேனஸின் மற்ற பெரிய நிலாக்களைப் போலவே  மிராண்டா அதன் கிரகத்தின் பூமத்தியரேகை க்கு அருகில் உள்ளது.

விரைவான உண்மைகள் கண்டுபிடிப்பு, கண்டுபிடித்தவர்(கள்) ...

வெறும் 470 கி.மீ. விட்டம் கொண்ட மிராண்டா ,  சூரிய மண்டலத்தில் மிகவும் உன்னிப்பாக கவனிக்ககப்படும் பொருள்களில் ஒன்றாகும் . அது ஹைட்ரோஸ்டெடிக் சமநிலையோடு (அதன் சொந்த ஈர்ப்பு கீழ்  உள்ள கோள்) இருக்கலாம். மிராண்டாவின் அருகில் எடுக்கப்பட்ட படங்கள் என்றால் அது  வாயேஜர் 2 ஆய்வு செய்தபோதுதான் . 1986 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அதன் யுரேனஸ் பயணத்தின்போது மிராண்டாவையும் இது ஆய்வு செய்தது. பயணத்தின்போது மிரண்வாடாவின் தென் அரைக்கோளமானது சூரியனை நோக்கி இருந்தது அதனால் அந்த பகுதி மட்டுமே ஆய்வு செய்யப்பட்டது. இந்த சந்திரனை இன்னும் விரிவாக ஆராய்வதற்கு தற்போது எந்தவொரு செயல்திட்டமும் இல்லை . எனினும் யுரேனஸ் சுற்றுப்பாதை மற்றும் ஆய்வு போன்ற பல்வேறு கருத்துக்கள் அவ்வப்போது முன்மொழியப்பட்டுள்ளன.    

யுரேனஸின்  மற்ற நிலவுகள்  போலவே , கிரக    உருவாக்கம் முடிந்த உடனேயே கிரகத்தைச் சுற்றியுள்ள ஒரு அக்ரேஷன் டிஸ்கில் இருந்து மிரண்டாவும் உருவாகியிருக்கலாம். மற்ற பெரிய நிலவுகளைப் போல இதுவும் வேறுபட்டது. எப்படியெனில் உள்மையம்  பாறையினாலும் கவசம் பனியினாலும் அமைந்துள்ளது .  சூரிய மண்டலத்தில் உள்ள எந்தவொரு பொருளைக் காட்டிலும்   மிராண்டா மிகக் கடுமையான மற்றும் மாறுபட்ட பரப்புக்களைகொண்டுள்ளது . வெரோனா ரூபஸ் உட்பட, அதாவது ஒரு 5- முதல் 10 கிலோமீட்டர் உயரமான செங்குத்துச் சரிவு மற்றும் மேலோட்டுப் பேரியக்கத்தினால் ஏற்பட்ட கோரோனெ என்ற V -வடிவ அம்சங்களைக் கொண்டுள்ளது. மற்ற எந்த யுரேனிய துணைக்கோள்களைக் காட்டிலும் இது மாறுபட்ட புவியியல் தோற்றம் மற்றும் பரிணாமத்தைக் கொண்டு உள்ளது. எனவே இதைப் பற்றி இன்னும் முழுமையாக புரிந்து கொள்ளப்படவில்லை. மிராண்டாவின் பரிணாமத்தைப் பற்றிய பல கருதுகோள்கள் உள்ளன.

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads