மிருகவானி தேசியப் பூங்கா

From Wikipedia, the free encyclopedia

மிருகவானி தேசியப் பூங்கா
Remove ads

மிருகவானி தேசியப் பூங்கா (Mrugavani National Park) என்பது இந்தியாவின் தெலங்காணா மாநிலத்தில் ஐதராபாத்தில் அமைந்துள்ள ஒரு தேசியப் பூங்கா ஆகும். இது, ஐதராபாத்தின் மகாத்மா காந்தி பேருந்து நிலையத்திலிருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள மொய்னாபாத் மண்டலத்தின் சில்கூரில் அமைந்துள்ளது. மேலும், இது 3.6 சதுர கிலோமீட்டர் (1.4 சதுர மைல்) அல்லது 1211 ஏக்கர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இது 600 வகையான தாவர இனங்களைக் கொண்டுள்ளது. சுமார் 350 புள்ளிமான்கள் இந்த பூங்காவில் உள்ளன. மேலும், இந்திய குழிமுயல், காட்டுப்பூனை, புனுகுப்பூனை, சாரைப்பாம்பு, கட்டுவிரியன், பூக்கொத்தி 200 க்கும் மேற்பட்ட மயில்கள் போன்ற உயிரனங்களும் உள்ளது. [1] [2] இன்று இந்த பூங்கா பல்லுயிர் பெருக்கத்தின் தாயகமாகும். பார்வையாளர்களுக்கான அனைத்து வசதிகளும் பூங்காவிற்குள் வழங்கப்பட்டுள்ளன.

விரைவான உண்மைகள் மிருகவானி தேசியப் பூங்கா, அமைவிடம் ...
Remove ads

வரலாறு

இது 1994இல் தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டது.

இடம்

இந்தப் பூங்கா சில்கூர் பாலாஜி கோயிலுக்கு அருகில் உள்ளது, ஐதராபாத், மகாத்மா காந்தி பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் உள்ளது.

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads