முதலாம் தியோடோசியஸ்

உரோமைப் பேரரசர் (ஆட்சி. கி. பி. 379 - 395) From Wikipedia, the free encyclopedia

முதலாம் தியோடோசியஸ்
Remove ads

முதலாம் தியோடோசியசு (கிரேக்கம்: Θεοδόσιος, ஆங்கிலம்: Theodosios) என்பவர் 379 முதல் 395 உரோமைப் பேரரசராக ஆட்சி செய்தவர் ஆவார். இவர் மகா தியோடோசியசு என்றும் அழைக்கப்படுகிறார். இவரது ஆட்சியின் போது கோத்துகளுக்கு எதிராக ஒரு முக்கியமான போரில் வெற்றி பெற்றார். மேலும் இரண்டு உள்நாட்டுப் போர்களில் வெற்றி, கிறிஸ்தவத்தின் மரபுவழி கொள்கையாக நைசின் விசுவாச அறிக்கையை நிறுவுவதிலும் முக்கியப் பங்காற்றினார். உரோமைப் பேரரசின் நிர்வாகமானது நிரந்தரமாக இரண்டு தனித் தனி அரசவைகளாக (மேற்கில் ஒன்று மற்றும் கிழக்கில் ஒன்று) பிரிக்கப்பட்டதற்கு முன்னர் ஒட்டு மொத்த உரோமைப் பேரரசையும் ஆட்சி செய்த கடைசி பேரரசர் தியோடோசியசு ஆவார்.

விரைவான உண்மைகள் முதலாம் தியோடோசியசு, உரோமைப் பேரரசர் ...

எசுப்பானியாவில் இவர் பிறந்தார். ஓர் உயர்தர தளபதியான மூத்த தியோடோசியசுவின் மகனாக இவர் பிறந்தார். தன் தந்தையின் வழிகாட்டுதலின் கீழ் உரோமானிய ராணுவத்தில் இவர் உயர்ந்தார். 374இல் மொயேசியாவில் சுதந்திரமான தலைமையை இவர் பெற்றிருந்தார். படையெடுத்து வந்த சர்மாசியர்களுக்கு எதிராக அங்கு இவர் ஓரளவு வெற்றி பெற்றார். ஆனால் சீக்கிரமே ஓய்வு பெறும் நிலைக்கு கட்டாயப்படுத்தப்பட்டார். தெளிவற்ற சூழ்நிலைகளின் கீழ் இவரது தந்தை மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார். பேரரசர் கிராதியனின் அரசவையில் ஒரு தொடர்ச்சியான சூழ்ச்சிகள் மற்றும் மரண தண்டனைகளை தொடர்ந்து தியோடோசியசு சீக்கிரமே தன்னுடைய பதவியை மீண்டும் பெற்றார். 379இல் கோத்துகளுக்கு எதிராக அத்ரியானோபில் யுத்தத்தில் கிழக்கு உரோமானிய பேரரசர் வேலன்சு இறந்த பிறகு அப்போதைய ராணுவ அவசர நிலைக்கு பொறுப்பேற்கும் ஆணையுடன் தியோடோசியசுவை கிராதியன் நியமித்தார். புதிய பேரரசரின் இருப்பு வளங்கள், பலவீனமடைந்த ராணுவங்கள் ஆகியவை படையெடுப்பாளர்களை துரத்துவதற்கு போதுமானதாக இல்லை. 382இல் பேரரசின் தன்னாட்சி உடைய கூட்டாளிகளாக தன்யூபு ஆற்றுக்கு தெற்கே குடியமர கோத்துகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. 386இல் தியோடோசியசு சாசானியப் பேரரசுடன் ஓர் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டார். சாசானியப் பேரரசு நீண்ட காலமாக பிரச்சினையில் இருந்து வந்த ஆர்மீனிய இராச்சியத்தை பிரித்தது. இரு பேரரசுகளுக்கு இடையில் நீடித்த அமைதிக்கு இது வழிவகுத்தது.[2]

Remove ads

குறிப்புகள்

  1. The name Flavius was mostly a status marker for men of non-senatorial background who rose to eminence as a result of imperial service.[1]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads