முத்துஐயன்கட்டு குளம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
முத்தையன் கட்டுக்குளம் (Muthuiyankaddu Kulam) இலங்கையின் வட மாகாணத்தில் உள்ள நீர்ப்பாசனக் குளமாகும். இது ஒட்டிசுட்டானில் இருந்து சுமார் 4 மைல் (6 கிலோமீற்றர்) தொலைவில் வடமேற்கு திசையில் அமைந்துள்ளது. இதன் சரியான அமைவிடம் 09°12'07"N 80°36'31"E ஆகும். செயற்கைக் குளமான இதற்கு நீர் வழங்கும் ஆறு பேராறு (ஆறு) ஆகும்.இதன் பராமரிப்பு வடமாகாணசபை , நீர்ப்பாசன திணைக்களம் என்பவற்றால் மேற்கொள்ளப்படுகிறது.இதன் மொத்த பரப்பளவு 66 சதுரமைல் (171 சதுர கிலோமீட்டர்). இது 41,000 ஏக்கர் அடி (50,572,755 கனமீற்றர்) கொள்ளளவுடையது.
Remove ads
வரலாறு
பேராற்றில் உள்ள குளம் ஆரம்பகாலத்தில் முத்துராயன் கட்டுக்குளம் என்றும் மண் மலை என்றும் அழைக்கப்பட்டது.[2] 66 சதுரமைல் பரப்பளவு கொண்ட இக்குளத்தின் பராமரிப்பு பணி 1959 ம் ஆண்டு தொடங்கப்பட்டது.[3]
1960 ம் ஆண்டு காலத்தின் பிற்பகுதியில் இதன் வரப்புப் பகுதி சுமார் 5,850 அடி ( 1783 மீற்றர்) நீளமுடையதாகவும் 27 அடி ( 8 மீற்றர்) உயரமுடையதாகவும் இருந்தது. அப்போது குளத்தின் கொள்ளளவு 41,000 ஏக்கர் அடியாகவும் ( 50,572,755 கன மீட்டர்) இருந்தது. மேலும் இக்குளத்தின் நீர்ப்பரப்பிடம் சுமார் 3,100 ஏக்கர் ( 1,255 ஹெக்டர்) ஆக உள்ளது.[2] மேலும் குளத்தின் இடது பக்கம் 500 அடி கொண்ட (152 மீட்டர்) கலிங்கு உண்டு.[4] அதன் இடது மற்றும் வலது புறத்தில் உள்ள மதகுகள் ஒவ்வொன்றும் 3 அடி 3 அங்குலம் 4 அடி 6 அங்குலம் கொண்டவை. 2014 ஆம் ஆண்டில் இது 6,100 ஏக்கர்களுக்கு(2469 ஹெக்டர்) நீர்ப்பாசன வசதி அளிக்கும் திறனைக் (கொள்ளவைக்) கொண்டிருந்தது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads