முள்ளிவாய்க்கால் மருத்துவமனை மீதான குண்டுவீச்சு

நான்காம் ஈழப்போரில் இலங்கை இராணுவத்தின் தாக்குதல் From Wikipedia, the free encyclopedia

முள்ளிவாய்க்கால் மருத்துவமனை மீதான குண்டுவீச்சுmap
Remove ads

முள்ளிவாய்க்கால் மருத்துவமனை (Mullivaikkal Hospital bombings) என்பது வடக்கு இலங்கையில் பாதுகாப்பு மண்டலத்தில் அமைந்திருந்த ஒரு தற்காலிகமாக மருத்துவமனை ஆகும். 2009 ஏப்ரல் 23 ஆம் நாள் முள்ளிவாய்க்கால் மருத்துவமனை மூன்று பீரங்கிக் குண்டுகளால் தாக்கப்பட்டபோது தொடர் ஷெல் மற்றும் வான்வழி தாக்குதல்கள் துவங்கின.[1] ஏப்ரல் 28 மற்றும் 29 ஆகிய இரண்டு நாட்களில் முள்ளிவாய்க்கால் ஆரம்ப சுகாதார நிலையம் பல முறை தாக்கப்பட்டபோது ஆறு பேர் கொல்லப்பட்டனர் மேலும் ஒரு மருத்துவ பணியாளர் உட்பட பலர் காயமடைந்தனர்.[1] 29 மற்றும் 30 ஆகிய நாட்களில் முள்ளிவாய்க்கால் மருத்துமனை மீண்டும் பலமுறை தாக்கப்பட்டது, அதில் ஒன்பது பேர் கொல்லப்பட்டு, பதினைந்து பேர் காயமடைந்தனர்.[1] மே 2 ஆம் தேதி முள்ளிவாய்க்கால் மருத்துவமனைக்கு எதிராக இரண்டு தாக்குதல்கள் நடத்ததப்பட்டன, ஒன்று காலை 9 மணிக்கு, அடுத்து காலை 10.30 மணிக்கு, இதில் அறுபத்தெட்டு பேர் கொல்லப்பட்டார், மருத்துவ ஊழியர்கள் உட்பட எண்பத்தேழு பேர் காயமடைந்தனர்.[1] 12 மே 2009 காலை இதை பீரங்கோ மோட்டார் என்னும் சேணேவி தாக்கியது. இதில் குறைந்தது நாற்பத்தொன்பது நோயாளிகள் கொல்லபட்டனர், ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தர். இந்த தாக்குதல்கள் அனைத்தையும் நிகழ்த்தியது இலங்கை இராணுவம் எனப்படுகிறது; எனினும், இலங்கை அரசு இதற்கு ஒரு ஆதாரமும் இல்லை என்று கூறி மறுத்தது.[2][3][4]

விரைவான உண்மைகள் முள்ளிவாய்க்கால் மருத்துவமனை மீதான குண்டுவீச்சு, இடம் ...

கடைசி குண்டுவீச்சு நேரத்தில், செஞ்சிலுவை சங்கம் அடுத்த இரண்டு நாட்களில் சுமார் 2,000 நோயாளிகளை பாதுகாப்பு மண்டலத்திலிருந்து வெளியே அனுப்ப திட்டமிடப்பட்டிருந்ததாக தமிழ்நெட் தெரிவித்தது.[5]

Remove ads

பின்னணியும் விசாரணைகளும்

முள்ளிவாய்க்காலில் உள்ள பாதுகாப்பு மண்டலத்தில் உள்ள மருத்துவமனைகளில் குறைந்தது எட்டு மருத்துவமனைகளை இலங்கை இராணுவம் கண்மூடித்தனமாக பீரங்கிகள், சேணேவிகள், வான்வழித் தாக்குதல் போன்றவற்றால், 2008 திசம்பரில் தாக்கியதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம்சாட்டியது.[1] இந்த தாக்குதல்கள் போர்க்குற்றங்கள் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் வாதிடுகிறது.[1] அவை மருத்துவமனைகள் என்று நன்கு குறிக்கப்பட்டுள்ளன என்றும் கூறியுள்ளனது.[1] அந்த நேரத்தில் எடுக்கப்பட்ட அமெரிக்க அரசாங்க ஒளிப்படங்கள் அவற்றை நன்கு அடையாளங் காட்டுகின்றன.[6]

2009 இல், ஈழப் போர் முடிவடைந்ததைத் தொடர்ந்து அமெரிக்க வெளியுறவுத்துறை "இலங்கையில் அண்மையில் நடந்த மோதலின் போது நடந்த சம்பவங்கள் குறித்து பேராயத்துக்கு அறிக்கை" ஒன்றை வெளியிட்டது. இலங்கை சனாதிபதி, மகிந்த ராசபக்ச அந்த அறிக்கையை ஆய்வு செய்து பதிலளிக்க ஒரு குழுவை நியமித்தார். குழு தலைவராக டி. எஸ். விஜேசிங்க பி. சி.,[7] உறுப்பினர்களாக நிஹால் ஜெயமன்னே பி. சி.,[7] சி. ஆர். டி சில்வா பிசி, மனோ ராமநாதன், ஜெசிமா இஸ்மாயில்[8] அனுர மெதேகொட.[9] ஆகியோர் இருந்தனர். குழுவின் செயலாளராக எஸ். எம். சமரகூன் இருந்தார். இந்தக் குழு மோதலின் பிற்பகுதியில் பணியாற்றிய ஆயுதப் படைகளின் உயர்நிலை அதிகாரிகள் மற்றும் புதுக்குடியிருப்பு, முள்ளிவாய்க்கால் மற்றும் ஏனைய மருத்துவமனைளைச் சேர்ந்த மருத்துவ அதிகாரிகள் உட்பட பல தரப்பினரிடம் விசாரணை நடத்தியது.[10] குழு பல கால நீட்டிப்புகளைப் பெற்றிருந்தாலும்,[10] எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.

இலங்கையில் பொறுப்புக்கூறல் தொடர்பான பொதுச்செயலாளரின் நிபுணர் குழுவின் 2011 ஏப்ரல் ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையானது, இலங்கை இராணுவ சேணேவிகள் மருத்துவமனைகளைத் தாக்கின என்ற குற்றச்சாட்டுகள் நம்பகமானவை என்று கூறின. குறிப்பாக முல்லைவாய்க்கால் மருத்துவனை இலங்கை இராணுவத்தினரால் சேணேவிகளால் தாக்கபட்டதாகவும் அவர்கள் கண்டறிந்தனர்.[11]

மே 2010 இல் ஜனாதிபதி ராஜபக்ஷ போருக்குப் பின்னர் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்தார்.[12] முள்ளிவாய்க்கால் மருத்துவனை மீது சேணேவி தாக்குதல் நடத்தபட்டது குறித்து ஆணைக்குழுவுக்கு சாட்சியங்கள் கிடைத்தன. அவர்களின் தங்கள் இறுதி அறிக்கையில் அவர்கள் பொதுவாக இவ்வாறு முடிவு செய்தனர்:

9.10 அனைத்து சூழ்நிலைகளையும் கவனமாக பரிசீலித்த ஆணையம், மருத்துவமனைகள் மீது குண்டுகள் விழுந்து சேதம் விளைவித்து உயிரிழப்புகளை ஏற்படுத்தியது என்ற குற்றச்சாட்டை ஏற்கிறது. எவ்வாறாயினும், ஆணையத்தின் முன் வைக்கப்பட்டுள்ள பொருள், நேரம், சரியான இடம் மற்றும் தாக்குதல் திசை ஆகியவற்றின் கண்ணோட்டத்தில் நிகழ்வுகளின் துல்லியமான தன்மையைப் பற்றிய சற்றே குழப்பமான சிதிரத்தை சுட்டிக்காட்டுகிறது.

நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை, [13]
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads