மேரி மக்கிலொப்

From Wikipedia, the free encyclopedia

மேரி மக்கிலொப்
Remove ads

மேரி மக்கிலொப் (Mary MacKillop, அல்லது சிலுவையின் புனித மேரி சனவரி 15, 1842 - ஆகத்து 8, 1909) என்பவர் ஆத்திரேலிய கத்தோலிக்க அருட்சகோதரியும் புனிதரும் ஆவார். இவர் அரு. ஜூலியன் டெனிசன் வூட்ஸ் என்பவருடன் இணைந்து திரு இருதயத்தின் புனித யோசேப்புவின் சகோதரிகள் என்ற துறவறசபையினை நிறுவினார். இச்சபையின் மூலம் பல கத்தோலிக்கப் பள்ளிகள், நலன்புரி அமைப்புகளை வறிய மக்களுக்கான கல்வி மேம்பாட்டைக் குறிக்கோளாகக் கொண்டு ஆஸ்திரலேசியா எங்கணும் தோற்றுவித்தார். ஆத்திரேலியாவில் புனிதர் பட்டம் பெற்ற முதல் நபர் மேரி மக்கிலொப் ஆவார்.

விரைவான உண்மைகள் சிலுவையின் புனித மேரிSaint Mary of the Cross, பிறப்பு ...

உலக இளையோர் நாள் 2008இல் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் 2008 சூலை 17 அன்று சிட்னிக்குப் பயணம் மேற்கொண்டபோது மேரி மக்கிலொப்பின் கல்லறைக்கு சென்று செபித்தார். மேரி மக்கிலொப்ப்பின் பரிந்துரையால் நடந்தது என நம்பப்படும் இரண்டாம் அதிசயத்தினை 2009 டிசம்பர் 19 இல் திருத்தந்தை அங்கீகரித்தார்[1]. இதனையடுத்து 2010, அக்டோபர் 17 ஆம் நாள் வத்திக்கான் நகரில் திருத்தந்தையினால் புனிதராக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார்[2][3][4][5].

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads