மைக்கேல் சூமாக்கர்
செருமனிய பந்தய ஓட்டுநர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மைக்கேல் சூமாக்கர் (Michael Schumacher பி. சனவரி 3, 1969) ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த தலைசிறந்த பார்முலா 1 ஓட்டுனராவார். இவர் ஏழு முறை (1994, 1995, 2000, 2001, 2002, 2003, 2004 ஆகிய வருடங்கள்) உலக வாகையர் பட்டத்தை வென்றுள்ளார். எக்காலத்தும் மிகச் சிறந்த F1 ஓட்டுநராகக் கருதப்படுகிறார்.[1][2][3][4] பெராரி அணிக்காக போட்டியிடும் இவர், 84 பந்தயங்களை வென்று சாதனை படைத்தவர். பார்முலா 1 பந்தயங்களில் மிக கூடுதலான போட்டிகளில் வென்றமை, மிக விரைவான சுற்றுக்கள், மிகக் கூடுதலான முன்னணி நிலைகள், ஒரே பருவத்தில் பல போட்டிகளில் வென்றமை (2004ஆம் ஆண்டில் 13 போட்டிகளில் வென்றார்) என பல சாதனைகளுக்கு உரிமையாளர். 2002ஆம் ஆண்டில் அப்பருவத்தின் ஒவ்வொருப் போட்டியிலும் முதல் மூவர்களில் ஒருவராகத் திகழ்ந்தது பார்முலா 1 வரலாற்றிலேயே இதுவரை யாரும் நிகழ்த்தாததாகும். அடுத்தடுத்து வாகை சூடிய வகையிலும் சாதனை புரிந்துள்ளார். பார்முலா 1 வலைத்தளத்தின்படி இந்த விளையாட்டில் புள்ளிவிவரப்படி கண்ட மிகச் சிறந்த ஓட்டுநர் இவரேயாம்.[5]

Remove ads
திசம்பர் 29, 2013 அன்று சூமாக்கர் தமது மகனுடன் பிரான்சில் உள்ள ஆல்ப்ஸ் மலைச்சரிவில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது விழுந்து கல்லில் தலை மோதியது. அப்போது அவர் பாதுகாப்பாக அறிவிக்கப்பட்ட பகுதியில் இல்லாது அதற்கு வெளியே இருந்தார். விபத்து நடந்த பதினைந்து நிமிடங்களுக்கு உள்ளாகவே இரு பனிச்சறுக்கு கண்காணிப்பாளர்களால் கவனிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வான்வழியே கொண்டுசெல்லப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் கிரனோபிள் நகரில் மூளைக் காயங்களுக்கு சிறப்பு வைத்தியம் வழங்கும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.[6][7][8] சூமாக்கர் புறவழி மூளைக் காயத்தினால் மருந்துகளால் தூண்டப்பட்ட ஆழ்மயக்கத்தில் இருப்பதாகவும் பெருமூளை நசுங்கி இருப்பதை மருத்துவ வரைவிகள் காட்டியதால் மூளை அழுத்தத்தை குறைக்க அவசர மூளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப் பட்டதாகவும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.[9]
இதழாளர் சந்திப்பில் அவரது மருத்துவர்கள் அவர் தலைகவசம் அணிந்திருந்தமையாலேயே உயிர்தப்பினார் எனக் கூறினர். அறுவை சிகிச்சைக்குப் பின்னதான வரைவுகள் "பரவலான குருதிக்கசிவு கோளாறுகள்" மூளையின் இருபக்கத்திலும் காணப்படுவதாகக் கூறிய மருத்துவர்களுக்கு அதன் விளைவுகளை கூற இயலவில்லை.[9][10] அவரது நெருங்கிய நண்பரும் மூளை மற்றும் தண்டுவட காய நிபுணருமான மருத்துவர் கெரார்டு சையாந்த் சிகிச்சை அளித்து வருகிறார்.[7] 1999இல் பிரித்தானிய கிராண்டு பிரீயில் சூமாக்கர் விபத்திற்குட்பட்டு கால் முறிவு பட்டபோது இவர்தான் சிகிச்சை அளித்துள்ளார்.[8]
Remove ads
மேற்சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads