மோகித் சர்மா

இந்தியத் துடுப்பாட்டக்காரர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

மோஹித் மஹிபல் சர்மா (பிறந்த நாள் 18 செப்டம்பர், 1988) ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இந்திய கிரிக்கெட் வீரர். அவர் ஒரு வலது-கை நடுத்தர வேக பந்து வீச்சாளர்.

விரைவான உண்மைகள் தனிப்பட்ட தகவல்கள், முழுப்பெயர் ...

2012-2013 ரஞ்சி கோப்பை போட்டியின் போது 7 ஆட்டங்களில் 37 விக்கட்டுக்களை சாய்த்தார். அந்த போட்டித் தொடரில் அவரது சராசரி 23. 2013 ஆம் ஆண்டு முதல் ஐபில் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். 2013 சீசனில் 15 ஆட்டங்களில் 23 விக்கட்டுகளை வீழ்த்தியிருந்தார். 

Remove ads

சர்வதேச போட்டிகள்

2013 ஆம் ஆண்டில் இந்தியத் துடுப்பாட்ட அணி சிம்பாப்வேயில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. இதில் ஆகஸ்டு 1 இல் , புலவாயோவில் நடைபெற்ற சிம்பாப்வேத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியில் 10 ஓவர்கள் வீசி 3 ஓவர்களை மெய்டனாக வீசினார். இதில் 26 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 2 இலக்குகளைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் இந்திய அணி 9 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[1] 2015 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. இதில் அக்டோபர் 1 இல் , மும்பையில் நடைபெற்ற தென்னப்பிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் விளையாடினார். இந்தப் போட்டியில் 7 ஓவர்கள் வீசி இதில் 84 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 1 இலக்குகளைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 234 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[2]

Remove ads

பன்னாட்டு இருபது20

2014 ஆம் ஆண்டில் நடைபெற்ற 2014 ஐசிசி உலக இருபது20 தொடரில் விளையாடும் வாய்ப்பினை இவர் பெற்றார். மார்ச் 30 , தாக்கவில் நடைபெற்ற ஆத்திரேலியத் துடுப்பாட்டா ணிக்கு எதிரான பன்னாட்டு இருபது20 போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியில் 2 ஓவர்கள் வீசி இதில் 11 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 1 இலக்குகளைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் இந்துய அணி 73 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[3]

2015 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. இதில் அக்டோபர் 5 இல் , கட்டாக்கில் நடைபெற்ற தென்னப்பிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான இரண்டாவது பன்னட்டு இருபது 20 துடுப்பாட்டப் போட்டியில் இவர் விளையாடினார். இந்தப் போட்டியில் 1 ஓவர்கள் வீசி இதில் 7 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார் . ஆனால் இலக்கினைக் கைப்பற்றவில்லை. இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 6 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[2]

Remove ads

இந்தியன் பிரீமியர் லீக்

2018 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இவர் கிங்சு இலெவன் பஞ்சாபு அணி சார்பாக விளையாடினார். இந்த அணியின் தலைவராக இந்தியத் துடுப்பாட்ட அணியின் வலதுகை புறத்திருப்ப பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அசுவின் நியமிக்கப்பட்டார்.

2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் ஏப்ரல் 8 இல் மொகாலியில் நடைபெற்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடினார். இந்தப் போட்டியில் 4 ஓவர்களை வீசி 33 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 2 இலக்குகளைக் கைப்பற்றினார்.[4]

ஏப்ரல் 13 இல் பெங்களூருவில் நடைபெற்ற பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடினார். இந்தப் போட்டியில் 4 ஓவர்களை வீசி 45 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். ஆனால் இலக்கினைக் கைப்பற்றவில்லை.[4] ஏப்ரல் 15 இல் மொகாலியில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடினார். இந்தப் போட்டியில் 4 ஓவர்களை வீசி 47 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். 1 இலக்கினைக் கைப்பற்றினார்.[4]

ஏப்ரல் 19 இல் மொகாலியில் நடைபெற்ற சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடினார். இந்தப் போட்டியில் 4 ஓவர்களை வீசி 51 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 2 இலக்குகளைக் கைப்பற்றினார்.[4] மே 8 இல் ஜெய்பூரில் நடைபெற்றராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடினார். இந்தப் போட்டியில் 4 ஓவர்களை வீசி 29 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார் . ஆனால் இலக்கினைக் கைப்பற்றவில்லை.[4]

விருதுகள்

ஒருநாள் போட்டி

ஆட்டநாயகன் விருது

மேலதிகத் தகவல்கள் S இல்லை, எதிர்ப்பாளர் ...

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads