ரவிசீனிவாசன் சாய் கிஷோர்
இந்தியத் துடுப்பாட்ட வீரர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ரவிசீனிவாசன் சாய் கிஷோர் (Ravisrinivaasan Sai Kishore, பிறப்பு: நவம்பர் 6, 1996) என்பவர் ஓர் இந்தியத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் உள்நாட்டுத் துடுப்பாட்டத்தில் தமிழ்நாடு அணிக்காகவும், ஐபிஎல்லில், குஜராத் டைட்டன்ஸ் அணிக்காகவும் விளையாடுகிறார்.[2] முதன்மையாக இடது கை வழமைச் சுழல் பந்து வீச்சாளரும் இடக்கை மட்டையாளருமாவார். இவர் அக்டோபர் 3, 2023 இல் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்காக தனது பன்னாட்டு இ20 போட்டியில் அறிமுகமானார்.
Remove ads
உள்ளூர்ப் போட்டிகள்
மார்ச் 12, 2017 இல் 2016–17 விஜய் அசாரே கோப்பையில் தமிழ்நாடு அணிக்காக பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார்.[3] அக்டோபர் 14, 2017 இல் 2017–18 ரஞ்சிக் கோப்பையில் தமிழ்நாட்டிற்காக முதல் தரத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார்.[4] சனவரி 8, 2018 இல் 2017–18 மண்டல இ20 லீக்கில் தமிழகத்திற்காக இருபது20 போட்டியில் அறிமுகமானார்.[5]
2018–19 ரஞ்சிக் கோப்பையில் தமிழ்நாடு துடுப்பாட்ட அனிக்காக ஆறு போட்டிகளில் 22 இலக்குகளை வீழ்த்தியதன் மூலம் அதிக இலக்குகளை வீழ்த்தியவர் பட்டியலில் முதலிடம் பெற்றார்.[6] 2019–20 சையத் முஷ்டாக் அலி கோப்பையிலும் 12 போட்டிகளில் 20 இலக்குகளை வீழ்த்தி முதலிடத்தில் இருந்தார்.[7]
Remove ads
ஐபிஎல்
2020 ஐபிஎல் ஏலத்தில், 2020 இந்தியன் பிரீமியர் லீக்கிற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ₹20 lakh எனும் அடிப்படை விலைக்கு வாங்கப்பட்டார்.[8][9] 2022 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) ஏலத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியால் ₹3 crore மதிப்பில் ஏலத்தில் வாங்கப்பட்டார்.[10][11]
சர்வதேசப் போட்டிகள்
சூன் 2021 இல், இந்தியாவின் இலங்கைச் சுற்றுப்பயணத்திற்கான ஐந்து வலைப் பயிற்சிப் பந்து வீச்சாளர்களில் ஒருவராகப் பெயரிடப்பட்டார்.[12] சுற்றுப்பயணத்தின் கடைசி இரண்டு இருபது20 சர்வதேச (டி20ஐ) போட்டிகளுக்கான இந்தியாவின் பிரதான அணியில் சேர்க்கப்பட்டார்.[13]
சனவரி 2022 இல், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இந்திய பன்னாட்டு இருபது20 அணியில் இரண்டு காத்திருப்பு வீரர்களில் ஒருவராக பெயரிடப்பட்டார்.[14]
சீனாவின் ஹாங்சோவில் நடந்த 2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார்.[15] நேபாளத்திற்கு எதிரான தனது முதல் போட்டியில் 4 நிறைவுகளில் 25 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து ஓர் இலக்கினைக் கைப்பற்றினார். வங்கதேசத்திற்கு எதிரான அரையிறுதியில், 12 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 இலக்குகளைக் கைப்பற்றினார்.[16]
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads