ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோவில், சென்னை
சென்னையிலுள்ள ஓர் ஐயப்பன் கோயில் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சென்னை ராஜா அண்ணாமலைபுரம் அய்யப்பன் கோவில் (Rajah Annamalaipuram Ayyappan Koil) என்பது இந்துக் கடவுளான அய்யப்பனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்துக் கோயில். இது சென்னையின் கடலோரப் பகுதியான ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ளது.
Remove ads
வரலாறு
இந்த கோயில் செட்டிநாடு அரச குடும்பத்தைச் சேர்ந்த ராஜா சர்.முத்தையா செட்டியாரின் மகன் தமிழ்நாட்டின் பிரபல தொழிலதிபர் எம். ஏ. எம். ராமசாமி என்பவரால் கட்டப்பட்டது.[1] இந்த கோயில் 1981ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது மற்றும் 1982 ஆம் ஆண்டில் ராஜா சர் முத்தையா செட்டியார் கோயிலுக்கு நன்கொடையாக அளித்த நிலத்தில் கட்டப்பட்டுள்ளது. பஞ்சலோகத்தால் (இயற்கையின் ஐந்து கூறுகளை குறிக்கும் ஐந்து விலைமதிப்பற்ற உலோகங்கள்) செய்யப்பட்ட அய்யப்ப சிலை, நாகர்கோயிலைச் சேர்ந்த சிற்பி ஸ்ரீ பட்டானாச்சாரியரால் செய்யப்பட்டது. இச்சிலை ஜனவரி 25, 1982 அன்று ராஜா அண்ணாமலைபுரம் கோயிலில் நிறுவப்படுவதற்கு முன்பு நாகர்கோயிலிலுள்ள கிருஷ்ணன் கோயிலிலிருந்து தமிழ்நாட்டின் பல்வேறு மத முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.[2] முதல் கும்பபிஷேகம் 29 ஜனவரி 1982 இல் நிகழ்த்தப்பட்டது. இரண்டாவதாக மார்ச் 27, 1994 அன்று நிகழ்த்தப்பட்டது.[3]
Remove ads
கோவில்
கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோயிலின் சரியான பிரதியாக இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது. சபரிமலையில் அயப்பன் உச்சியில் இருப்பதைப் போல் இங்கேயும் ஒரு மலையின் உச்சியில் இருப்பதற்கான உணர்வைக் கொடுப்பதற்காக இந்த கோயில் மூன்று தளங்களில் கட்டப்பட்டுள்ளது.[3] இந்த கட்டிடக்கலை கேரள பாணியையும் பாரம்பரியத்தையும் பிரதான சன்னதி மற்றும் கருவறைக்கு 18 படிகள் போன்ற முறைகளைப் பின்பற்றுகிறது. இந்த கோயில் வட சபரி அல்லது வடக்கு சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. வழிபாட்டு முறைகள் சபரிமலை கோயிலுக்கு ஒத்தவையாக உள்ளன. இதன் மூலம் பக்தர்கள் அனைத்து விரதங்களையும் கடைப்பிடித்து, இருமுடியை (புனிதமான இரட்டை சாமான்களை) எடுத்துச் சென்று, சபரிமலைக்கு யாத்திரை மேற்கொள்வதைப் போல சரண முழக்கங்கள் மற்றும் பக்திப்பாடல்களைப் பாடுகிறார்கள். இருமுடி இல்லாமல் கோயிலுக்கு வரும் மற்ற பக்தர்களுக்கு தனியான பாதை உள்ளது.[1] கன்னிமூல மகா கணபதி, மாலிகாபுரத்து அம்மன், நாகராஜா மற்றும் பிற பரிவார தேவதைகள் ஆகியோரின் துணை ஆலயங்களுடன் சபரிமலையின் அனைத்து அம்சங்களும் இந்த கோவிலிலும் உள்ளன.[2] கோயிலின் கொடிமரம் (கொடி இடுகை) என்பது ஒற்றைத் துண்டு 40 அடி உயரம் கொண்டது. கோயிலுக்கு கீழே 125 அடி 100 அடி உயரமுள்ள ஒரு தியான மண்டபம், மண்டல பூஜை மற்றும் முக்கிய திருவிழாவின் போது பக்தகர்கள் தங்க வைக்கப்படுகிறது. இம்மண்டபம் ஜெய்ப்பூர் ஓடுகளால் கட்டப்பட்டுள்ளது. இங்கு 1,500 பக்தர்களை தங்க வைக்கும் வசதி உள்ளது.[1][3] திருவிழா மற்றும் பிற முக்கிய நாட்களில் இசை நிகழ்ச்சிகள், மத சொற்பொழிவுகள் மற்றும் பிற நிகழ்வுகள் இம்மண்டபத்தில் நடைபெறும்.[2] திருவிழா நாட்களில் சுவாமியினை ஊர்வலமாக எடுத்துச் செல்ல தங்க மற்றும் வெள்ளி இரதங்களும் இந்த கோவிலில் உள்ளன.[2]
இக்கோவிலில் விழாக்காலங்களில் திருஉலா எடுத்துச்செல்ல ஒரு தங்க ரதமும் ஒரு வெள்ளி ரதமும் உள்ளன.[4]
Remove ads
வழிபாடு
கோயிலில் உள்ள பூஜைகள் (மத நடைமுறைகள்) சபரிமலையில் உள்ள விதிகளின்படி செய்யப்படுகின்றன, வித்தியாசம் என்னவென்றால், சபரிமலை கோயில் ஒரு வருடத்தில் குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே திறந்திருக்கும், அதே சமயம் ராஜா அண்ணாமலைபுரம் கோயில் பக்தர்களுக்காக ஆண்டு முழுவதும் பகல் வேளையில் திறக்கப்பட்டுள்ளது.[1]
பண்டிகைகள்
கோவிலில் திருவிழாக்கள் கார்த்திகை முதல் நாள் (நவம்பரில்) மண்டல பூஜைகள் மற்றும் பிரம்மோத்ஸவத்துடன் தொடங்குகின்றன.[1]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads