ராஜ்தீப் சர்தேசாய்
இந்தியத் துடுப்பாட்டக்காரர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ராஜ்தீப் சர்தேசாய் (Rajdeep Sardesai) (பிறப்பு:24 மே 1965), இந்தியப் பத்திரிகையாளர், அரசியல் பார்வையாளர். சர்தேசாய் தற்போது இந்தியா டுடே குழுமத்தின் ஆலோசக ஆசிரியராக உள்ளார்.[2][3]
Remove ads
வாழ்க்கை வரலாறு
ராஜ்தீப் சர்தேசாய் அகமதாபாத், குஜராத் மாநிலத்தில் பிறந்தார். இவரது தந்தை கோவாவைச் சேர்ந்த முன்னாள் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வீரர் திலீப் சர்தேசாய், இவரது தாயார் மகாராஷ்டிராவைச் சேர்ந்த நந்தினி சர்தேசாய். இவர் மும்பையில் சமூக சேவகியாக தொண்டாற்றியதுடன், மும்பை, புனித சேவியர் கல்லூரியில் சமூகவியல் துறையின் தலைவராகவும் பணியாற்றினார்.
வேலை
2007 ஆம் ஆண்டு, இந்தியப் பத்திரிகைத் துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக பத்மஸ்ரீ விருதை சர்தேசாய் பெற்றார். புகழ்பெற்ற "தி பிக் ஃபைட்" என்ற தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியை நடத்தினார். ஜிபிஎன் நிறுவுவதற்கு முன்னர், என்டிடிவி/24X7 மற்றும் என்டிடிவி/இந்தியா ஆகிய ஒலிபரப்புச் சேவைகளுக்கு நிர்வாக ஆசிரியராக பணிபுரிந்துள்ளார். இவை இரண்டுக்கும் செய்தி கோட்பாடுகளைக் கண்காணிக்கும் பொறுப்பை இவர் ஏற்றுக்கொண்டிருந்தார்.
சர்ச்சைகள்
விவசாயிகள் போராட்டம் குறித்து தவறான செய்தி ஒளிபரப்பியதாக இந்தியா டுடே டி.வி. சானல் செய்தி ஆசிரியர் ராஜ்தீப் சர்தேசாயின் ஒரு மாத சம்பளத்தை பிடித்தம் செய்து தண்டனை வழங்கியது டி.வி. சேனல் நிர்வாகம்.[4]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads