ரிவாத் மக்கள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பாக்கித்தான் நாட்டில் ரவாத் பகுதியில் ரிவாத் மக்கள் வாழ்ந்த பகுதிகள் (clickable map).
ரிவாத் மக்கள் (Riwat) பாகிஸ்தான் பஞ்சாப் மாநிலத்தில், வடமேற்கு எல்லைப்புற மாகாணம் மற்றும் இந்தியாவின் காஷ்மீர் சந்திக்கும் மலைப்பகுதியில் அமைந்த ரவாத் எனுமிடத்தில் 19 இலட்சம் (1.9 மில்லியன்) ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த கீழ் பழைய கற்கால மனிதர்களை குறிப்பிடுகிறது.
19 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்பிரிக்காவிலிருந்து குடிபெயர்ந்து பாகிஸ்தானின் ரவாத் பகுதியில் வாழ்ந்தாக கருதப்படும் ரிவாத் மக்களைப் பற்றிய குறிப்புகள், 1983-இல் தொல்லியல் அகழ்வாராய்ச்சியாளர்களால் கண்டு பிடிக்கப்பட்டது.[1] இத்தொல்லியல் களங்களின் காலம் குறித்த ஆய்வுகள் தொடர்ந்து செய்யப்பட்டு வருகின்றன.[2]
1983 ஆம் ஆண்டில் இப்பகுதியில் வாழ்ந்த ரிவாத் மக்கள் பயன்படுத்தியதாகப் கருதப்படும் படிகக் கல்லால் ஆன கைவினை பொருட்கள் கிடைத்துள்ளது. மேலும் ரிவாத் அகழ்வாராய்ச்சிப் பகுதி எண் 55-இல், 45,000 ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் வாழ்ந்த பகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.[3]
Remove ads
மேற்கோள்கள்
மேலும் காண்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads