ரேடியம் ஆக்சைடு

வேதிச் சேர்மம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

ரேடியம் ஆக்சைடு (Radium oxide) என்பது RaO என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியல் சேர்மமாகும். ரேடியமும் ஆக்சிசனும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[1]

விரைவான உண்மைகள் இனங்காட்டிகள், பண்புகள் ...
Remove ads

தயாரிப்பு

ரேடியம் உலோகத்தை காற்றில் எரித்தால் ரேடியம் ஆக்சைடு உருவாகிறது.:[2]

2Ra + O2 → 2RaO

இவ்வினையில் அநேகமாக ரேடியம் நைட்ரைடும் ரேடியம் பெராக்சைடும் உருவாகவும் வாய்ப்புகள் உள்ளன:

3Ra + N2 → Ra3N2
Ra + O2 → RaO2

வேதிப் பண்புகள்

ரேடியம் ஆக்சைடு தண்ணீருடன் வினைபுரிந்து ரேடியம் ஐதராக்சைடு உருவாகிறது.

RaO + H2O → Ra(OH)2

பயன்கள்

கதிரியக்கச் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் பிற ரேடியம் சேர்மங்களை தயாரிக்க உதவும் முன்னோடிச் சேர்மமாக ரேடியம் ஆக்சைடு பயன்படுகிறது.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads