லீலா பேலஸ் சென்னை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
லீலா பேலஸ் சென்னை, இந்தியாவின் சென்னையில் அமைந்துள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஆகும். மெரினா கடற்கரையின் தெற்கு முடிவான, எம்ஆர்சி நகரில் இது அமைந்துள்ளது. அட்லாண்டாவினை அடிப்படையாகக் கொண்டு இதன் வடிவமைப்பு உருவாக்கப்பட்டது. அதன் பின்னர் தமிழ்நாட்டின் செட்டிநாட்டின் [5] முறைப்படி மாற்றியமைக்கப்பட்டது. 8000 மில்லியனுக்கும் [6][7] அதிகமான பணத்தினைக் கொண்டு செப்டம்பர், 2012 இல் இந்த ஹோட்டல் திறக்கப்படுவதாக இருந்தது. ஆனால் கட்டிட வேலைகள் மற்றும் செயல்பாடுகளுக்கான ஆயத்தப் பணிகள் அதிகம் இருந்ததால் ஜனவரி 2013 இல் திறக்கப்பட்டது.[8]
Remove ads
இருப்பிடம்
அடையார் ஆறும், வங்காளா விரிகுடா கடலும் இணையும் இடத்திற்கு அருகில் லீலா பேலஸ் சென்னை அமைந்துள்ளது. சுமார் 4.8 ஏக்கரினை ஆக்கிரமித்துள்ள இந்த ஹோட்டல், கடலை முகப்பாகக் கொண்டு சென்னையில் அமைந்த முதல் ஹோட்டல் ஆகும். தமிழ்நாட்டின் மத்திய வணிகப்பகுதியாக அமைந்துள்ள சென்னையில் லீலா பேலஸ் அமைந்துள்ளதால், இதனருகில் அநேக சுற்றுலாத்தலங்களும் அமைந்துள்ளன.
பார்த்தசாரதி கோவில் தோராயமாக 4 கிலோ மீட்டர் தூரத்திலும், மெரினா கடற்கரையில் இருந்து தோராயமாக 2 கிலோ மீட்டர் தூரத்திலும் லீலா பேலஸ் சென்னை ஹோட்டல் அமைந்துள்ளது. ஹோட்டலில் இருந்து 16 கிலோ மீட்டர் தொலைவில் அண்ணா சர்வதேச விமான நிலையம் மற்றும் காமராஜர் உள்ளூர் விமான நிலையம் ஆகியவை அமைந்துள்ளது.[9]
Remove ads
வரலாறு
தொழிலதிபர் எம். ஏ. எம். ராமசாமியிடம் இருந்து 700 மில்லியன் ரூபாய் கொடுத்து இந்த ஹோட்டலுக்கான இடம் வாங்கப்பட்டது.[10] செப்டம்பர் 2014 இல் 16000 சதுர அடி கொண்ட, ஹோட்டலின் மருத்து நீருற்று திறக்கப்பட்டது.[11]
ஹோட்டல்
வங்காள விரிகுடாவினைப் பார்க்கும்படியான கோணத்தில் சுமார் 6.25 ஏக்கர் அளவில் லீலா பேலஸ் அமைந்துள்ளது. 16 அடுக்கு கொண்ட இந்த ஹோட்டல், 831,000 சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது. இதில் 338 அறைகள் உள்ளன.[12] 2200 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட விருந்து மற்றும் கூட்டம் நடைபெறக்கூடிய அரங்க வசதிகள், 1390 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட வழவழப்பான நடைபாதையும், மேலடுக்கு கொண்ட மாடியும், பாரம்பரிய முறைப்படி செப்பனிடப்பட்ட முற்றம், உணவு விடுதிகள் மற்றும் பார், 1394 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட மருத்து நீருற்று மற்றும் 1060 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட விருந்தளிக்கும் பகுதி ஆகியவை இந்த ஹோட்டலில் அமைந்துள்ளன.[13][14] லீலா பேலஸ் ஹோட்டலில், மொத்தம் 6 கூட்ட அரங்கு அறைகள் உள்ளன. மழைநீர் சேகரிப்பு போன்ற சிறந்த திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ள இந்த ஹோட்டலில், LED விளக்குகள் மூலம் வெளிப்புற ஒளியும், உட்புற ஒளியும் பெறப்படுகின்றன.
லீலா ஹோட்டலின் மதுநாயர் மற்றும் டிசைன்வில்க்ஸின் ஜெஃப்ரே வில்க்ஸ் ஆகியோர் இணைந்து 12 அறை கொண்ட மருத்து நீருற்றுவினை உருவாக்கியுள்ளனர். இது சுமார் 16000 சதுர அடி பரப்பளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.[11]
மென்பொருள் பூங்கா
ஹோட்டலுக்கான இடத்திற்கு அடுத்தபடியாக சுமார் 250,000 சதுர அடி பரப்பளவில் லீலா வணிகப் பூங்கா அமைந்துள்ளது.[15] இந்த வணிகப்பகுதியினை ஹோட்டலின் நிர்வாகக்குழு விற்க முடிவு செய்தது. இதற்காக ரிலையன்ஸ் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்று ரிலையன்ஸ் நிறுவனம் ஐடி பூங்காவினை சுமார் 1720 மில்லியன் ரூபாய்க்கு வாங்கவிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தன. பேசிய விலைக்கு வாங்குவதற்கு, ரிலையன்ஸ் நிறுவனங்கள் பிப்ரவரி மாத இறுதியில் சம்மதித்தது[16] .
Remove ads
அறைகள்
டீலக்ஸ் அறை நகரப் பார்வை
538 சதுர அடி பரப்பளவு கொண்ட டீலக்ஸ் அறை, சென்னை நகரில் அமைந்துள்ள மிகப்பெரிய அறைவகைகளுள் ஒன்று. இதில் கடல் பார்வையும் கிடைக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறைகளில் அதிவேக இணைய வசதி, கம்பியில்லா இணையச் சேவை, சோனி நிறுவனத்தின் 40 இஞ்ச் தெளிவுமிக்க தொலைக்காட்சி மற்றும் மின்சாரப் பாதுகாப்பு ஆகியவை உள்ளது. சலவைக்கல் பதிக்கப்பட்ட குளியலறை, கண்ணாடியால் மறைக்கப்பட்ட தனி குளியல் பகுதி, இரு பெரிய கைகழுவும் பகுதி ஆகியவை உள்ளன. இரு படுக்கை மெத்தைகள் இருக்கும் தேவைக்கேற்றாற்போல் வழங்கப்படுகின்றன. அத்துடன் பாதுகாப்பு, தொலைபேசி மற்றும் செய்தித்தாள் வசதிகளும் உள்ளன.
டீலக்ஸ் அறை கடல் பார்வை
538 சதுர அடி பரப்பளவு கொண்ட டீலக்ஸ் அறை, சென்னை நகரில் அமைந்துள்ள மிகப்பெரிய அறைவகைகளுள் ஒன்று. இதில் கடல் பார்வையும் கிடைக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறைகளில் அதிவேக இணைய வசதி, கம்பியில்லா இணையச் சேவை, சோனி நிறுவனத்தின் 40 இஞ்ச் தெளிவுமிக்க தொலைக்காட்சி மற்றும் மின்சாரப் பாதுகாப்பு ஆகியவை உள்ளது. சலவைக்கல் பதிக்கப்பட்ட குளியலறை, கண்ணாடியால் மறைக்கப்பட்ட தனி குளியல் பகுதி, இரு பெரிய கைகழுவும் பகுதி ஆகியவை உள்ளன. இரு படுக்கை மெத்தைகள் வேண்டுகோளின் அடிப்படையில் தரப்படுகின்றன. அத்துடன் பாதுகாப்பு, தொலைபேசி மற்றும் செய்தித்தாள் வசதிகளும் உள்ளன.
பிரிமீயர் கடல் பார்வை அறை
721 சதுர அடி பரப்பளவு கொண்ட ராஜ மெத்தை, பிரிமீயர் கடல் பார்வை அறை தடையில்லா கடல் பார்வையினை வழங்கும். இந்த அறைகளில் அதிவேக இணைய வசதி, கம்பியில்லா இணையச் சேவை, சோனி நிறுவனத்தின் 40 இஞ்ச் தெளிவுமிக்க தொலைக்காட்சி மற்றும் மின்சாரப் பாதுகாப்பு ஆகியவை உள்ளது. சலவைக்கல் பதிக்கப்பட்ட குளியலறை, கண்ணாடியால் மறைக்கப்பட்ட தனி குளியல் பகுதி, இரு பெரிய கைகழுவும் பகுதி ஆகியவை உள்ளன. இரு படுக்கை மெத்தைகள் வேண்டுகோளின் அடிப்படையில் தரப்படுகின்றன. அத்துடன் பாதுகாப்பு, தொலைபேசி மற்றும் செய்தித்தாள் வசதிகளும் உள்ளன.
Remove ads
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads

