வ. அ. இராசரத்தினம்

From Wikipedia, the free encyclopedia

வ. அ. இராசரத்தினம்
Remove ads

வ. அ. இராசரத்தினம் (5 சூன் 1925 - 22 பெப்ரவரி 2001) புகழ் பெற்ற ஈழத்து சிறுகதை, நாவல் எழுத்தாளர். சுருக்கமாக "வ. அ." என அறியப்படுபவர். "ஈழநாகன்", "கீழக்கரை தேவநேயப் பாவாணர", "வியாகேச தேசிகர்" என்னும் பல புனைபெயர்களிலும் எழுதியுள்ளார்.

விரைவான உண்மைகள் வ. அ. இராசரத்தினம், பிறப்பு ...
Remove ads

வாழ்க்கைக் குறிப்பு

திருகோணமலை மாவட்டம், மூதூரைப் பிறப்பிடமாக கொண்ட இவரின் பெற்றோர் வஸ்தியாம்பிள்ளை, அந்தோனியா. தாமரைவில் இரோமன் கத்தோலிக்கப் பாடசாலையிலும் பின்னர் மூதூர் புனித அந்தோனியார் பாடசாலையிலும் கல்வி கற்றார். 1952 இல் மேரி லில்லி திரேசா என்பாரைத் திருமணம் புரிந்தார்.

இலக்கியப் பயணம்

1946 இல் மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து ஆசிரியப் பயிற்சியைப் பெற்றார். அங்குதான் அவர் தனது மழையால் இழந்த காதல் என்ற சிறுகதையை எழுதினார். இது 1948 ஆம் ஆண்டு செப்டம்பரில் தினகரன் பத்திரிகையில் வெளிவந்தது. இவரது முதற் கவிதை திருகோணமலையில் இருந்து அ. செ. முருகானந்தனை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த எரிமலை என்ற பத்திரிகையில் 1948 இல் வெளிவந்தது. இவர் தனது இலக்கியப் பயணத்தை சுய வரலாற்று நூலாக இலக்கிய நினைவுகள் என்ற பெயரில் எழுதியுள்ளார்.

Remove ads

அரசியலில்

வ. அ. இராசரத்தினம் 1959 மூதூர் கிராமசபைத் தேர்தலில் பிரதேச சுயாட்சியை வலியுறுத்திப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1]

பிற்கால வாழ்க்கை

ஈழப்போரில் இராசரத்தினத்தின் குடும்பமும் பெரிதும் பாதிக்கப்பட்டது. அவரது சேகரிப்பிலிருந்த பெறுமதியான நூல்களும் அவரது வீட்டுடன் தீக்கிரையாகின. வீடிழந்து இடம்பெயர்ந்து வாழ்ந்தார். அதனால் அவரது வீட்டிலிருந்த அவரது சொந்த அச்சுக்கூடமும் அழிந்தது. போரில் மனைவியை இழந்தார். வேறொரு தாக்குதல் சம்பவத்தில் தனது மகளையும், மருமகனையும் இழந்தார்.[2]

இராசரத்தினம் 2001 பெப்ரவரி 22 வியாழக்கிழமை தனது 75-ஆவது அகவையில் மூதூரில் காலமானார்.[3]

Remove ads

விருதுகள்

  • அகில இலங்கை சாகித்திய மண்டல விருது[3]
  • வட-கிழக்கு மாகாண சாகித்திய விருது[3]
  • இலங்கை அரசின் 'தமிழ்மணி' பட்டம்[3]
  • வடகிழக்கு மாகாண ஆளுநர் விருது[3]

இவரது நூல்கள்

  • துறைக்காரன் (நாவல்)
  • கொழுகொம்பு (நாவல்)
  • கிரௌஞ்சப் பறவைகள் (நாவல்)
  • ஒரு காவியம் நிறைவு பெறுகிறது (சிறுகதைத் தொகுதி)
  • ஒரு வெண்மணற் கிராமம் காத்துக் கொண்டிருக்கின்றது (நாவல்)
  • தோணி (சிறுகதைத் தொகுதி)
  • பூவரசம் பூ (மொழிபெயர்ப்புக் கவிதை)
  • மூதூர் புனித அந்தோனியார் கோயிலின் பூர்வீக வரலாறு (சரித்திரம்)
  • இலக்கிய நினைவுகள் (நினைவுக் கட்டுரைகள், அன்பர் வெளியீடு, திருக்கோணமலை, 1995)

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads