வசந்த பஞ்சமி

From Wikipedia, the free encyclopedia

வசந்த பஞ்சமி
Remove ads

வசந்த பஞ்சமி, வட இந்தியாவில் கொண்டாடப்படும் சிறப்பு நாட்களில் ஒன்றாகும். வசந்த பஞ்சமி நாளை ரிஷி பஞ்சமி என்றும் ஸ்ரீ பஞ்சமி என்றும் அழைப்பர். வட இந்தியாவில், மக (மாசி) மாதம் (சனவரி - பிப்ரவரி) சுக்ல பட்ச (வளர்பிறை) ஐந்தாம் நாளான (பஞ்சமி) வசந்த பஞ்சமியன்று, சரஸ்வதி பூஜையை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. வாக்தேவி, சாரதா, பாரதி, பிராமி, வீணாவாதினி, வாணி எனப் பலபெயர்களால் அழைக்கப்படும் சரசுவதி தேவி தோன்றிய நாளாக வசந்த பஞ்சமி கருதப்படுகிறது. வட இந்தியாவில் வசந்த பஞ்சமி திருநாளை வீடுகளிலும், கோயில்களிலும், பொது இடங்களிலும், சமுதாயத் திருநாளாகக் கொண்டாடப்படுகிற்து. [3]

விரைவான உண்மைகள் வசந்த பஞ்சமி, அதிகாரப்பூர்வ பெயர் ...
Remove ads

தொன்ம நம்பிக்கைகள்

மேற்கு வங்கத்தில் வசந்த பஞ்சமி நாளன்று குழந்தைகளின் கல்வி துவங்குகிறது. இந்நாளில் கல்வியைத் துவக்கவுள்ள குழந்தைகள் முன்பாக பென்சில், பேனா, சிறிய தொழிற் கருவிகள் போன்றவற்றை வைத்து அவற்றில் ஏதாவது ஒன்றை எடுக்கச் சொல்வர். குழந்தை எடுக்கும் பொருளின் அடிப்படையில் அதன் ஆர்வமும், எதிர்காலம் அமையும் என்பது நம்பிக்கை. [4]

Thumb
வசந்த பஞ்சமி அன்று மஞ்சள் நிற ஆடையில், கைகளில் வீணையுடன் சரசுவதி தேவி

மேலும் குஜராத் போன்ற மாநிலங்களில் இளைஞர்கள் பல வண்ணப் பட்டங்களை காற்றில் பறக்கவிடுவர். பஞ்சாப், அரியானா, மேற்கு வங்காளம், ஜம்மு காஷ்மீர், அசாம், திரிபுரா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் வசந்த பஞ்சமி நாளில் சரஸ்வதி பூஜையை சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். வசந்த பஞ்சமி அன்று, சரஸ்வதி தேவிக்கு மஞ்சள் ஆடை, மஞ்சள் மலர் மாலைகள் அணிவித்து பூஜை செய்கின்றனர். பூஜையில் வைக்கப்படும் விநாயகரும் மஞ்சள் நிறத்தில் இருக்கும். சரசுவதி தேவிக்கு படையல் வகைகளும் மஞ்சள் நிறத்தில் தயாரிக்கப்படுகிறது. வசந்த பஞ்சமி நாளான்று பெண்களும் மஞ்சள் நிற ஆடைகள் அணிகின்றனர். [5]

இராஜஸ்தான் மாநிலம் புஷ்கரில் உள்ள பிரம்மா - சரஸ்வதி கோயில், கர்நாடகத்தில் உள்ள உடுப்பி கிருஷ்ணர் கோயில், ஒரிசாவில் உள்ள புரி ஜெகன்நாதர் கோயில்களில் வசந்த பஞ்சமி திருநாள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

தமிழ்நாட்டில் வசந்த பஞ்சமி நாளை, காமதேவனைப் போற்றும் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. [1]

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads