வசந்தி (நடிகை)

இந்திய நடிகை, தயாரிப்பாளர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

வசந்தி பி. ஏ (இயற்பெயர் கரணம் வசந்தி ) என்பவர் ஒரு இந்திய நடிகையும் தயாரிப்பாளரும் ஆவார். இவர் 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழித் திரைப்படத்துறையில் தீவிரமாக செயல்பட்டார். இவர் இரண்டாவது கதாநாயகியாகவும், சில திரைப்படங்களில் துணை வேடங்களில் நடித்ததற்காக நன்கு அறியப்பட்டார்.[1]

விரைவான உண்மைகள் வசந்தி, பிறப்பு ...
Remove ads

தனிப்பட்ட வாழ்க்கை

வசந்தி, தி.மு.க அரசியல்வாதியும், தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினருமான பெ. சீனிவாசனை மணந்தார். இவர் 2019 மே 29 அன்று இறந்தார். சென்னை அண்ணா நகரில் உள்ள இவரது இல்லத்தில். அவரது மகளும், சகோதரியின் மகனும் இவரை கவனித்துக் கொண்டனர்.

திரைப்பட வாழ்க்கை

1960 ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படமான மகாகவி காளிதாசுவில் அறிமுகமான வசந்தி, 1961 ஆம் ஆண்டு வெளியான 'தேன் நிலவு' திரைப்படத்தின் வழியாக தமிழில் அறிமுகமானார். [2] மாடப்புறா படத்தில் எம். ஜி. ராமச்சந்திரனுக்கு ஜோடியாக இரண்டாவது கதாநாயகியாகவும் நடித்தார். வசந்தி நன்கு படித்த பெண்ணாக திரைப்படத் துறையில் நுழைந்தார். இது அவரது காலத்தின் கதாநாயகிகளுக்கு (1960கள்) ஒரு அசாதாரண விசயமாகும். உயரமான, மெல்லிய உடலும், பெரிய கண்களையும் கொண்ட வசந்தி, பெரும்பாலும் கண்ணியமான கதாபாத்திரங்களில் நடித்து ஒரு குடும்பப் பெண் என்ற பிம்பத்தைக் கொண்டிருந்தார்.

Remove ads

திரைப்படவியல்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, படம் ...

தயாரிப்பாளராக

  1. மேமு மனுஷுலமே (1973) – தெலுங்கு
  2. பலே பாப்பா (1971) – தெலுங்கு

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads