வடக்கு மரியானா தீவுகள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வடக்கு மரியானா தீவுகள் (Northern Mariana Islands, /ˈnɔrðərn mɛəriˈænə ˈaɪləndz/ ), ஐக்கிய அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள ஆனால் ஓரளவு தன்னாட்சி உடைய தீவுகள் ஆகும். மேற்கு பசிபிக் பெருங்கடலில் இந்த தீவுகள் அமெரிக்காவுக்கு இராஜதந்திர முக்கியத்துவம் கொண்டவை. இந்த தீவுகளின் மொத்த பரப்பளவு 463.63 கி.மீ.². இங்கு கிட்டத்தட்ட 80,362 (2005 ஊகம்) மக்கள் வசிக்கின்றனர்.[1][2][3]
1521 ஆண்டு இந்த பகுதி ஸ்பானியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது. இங்கிருந்த பழங்குடிகளுக்கும் இவர்களுக்கும் நடந்த சண்டையில் பழங்குடிகள் பலர் மாண்டனர். 1898 ஸ்பானிய அமெரிக்கா போருக்கு பின்னர் இதன் சில பகுதிகள் அமெரிக்காவுக்கும் எஞ்சிய பகுதிகள் யேர்மனிக்கும் சேர்ந்தது. 1919 யப்பான் இந்த தீவுகளைப் பெற்றுக்கொண்டது. 1945 பின்னர் யப்பானை தோற்கடித்த அமெரிக்கா இந்த தீவுகளைப் பெற்றுக்கொண்டது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads

