வண்ணக்கன்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

வண்ணக்கன் என்னும் அடைமொழியோடு குறிப்பிடப்பட்ட புலவர்கள் சங்க நூலில் காணப்படும் பாடல்கள் சிலவற்றைப் பாடியுள்ளனர்.

ஆகியோர் அவர்கள். இவர்களைப் பற்றி எண்ணும்போது 'வண்ணப்புறம்' என்னும் அடைமொழியோடு வரும் வண்ணப்புறக் கந்தரத்தனார் என்னும் புலவரும் எண்ணிப்பார்க்கத் தக்கவர். இவர்களைப் பற்றி எண்ணும்போது சங்கநூல்களில் பயின்றுவந்துள்ள வண்ணகம், வண்ணத்தர் என்னும் சொற்களும் ஓப்புநோக்கத் தக்கவை.

விற்பனைக்கு வரும் பொன்னை உரைத்துப் பார்த்துத் தரம் காணும் தொழிலாளர்கள் சங்ககால மதுரையில் வாழ்ந்துவந்தது பற்றிய செய்தி மதுரைக்காஞ்சி நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை ஒப்புநோக்கி பொன்னில் தரவண்ணம் காணும் கலைஞர்கள் வண்ணக்கன் எனப்பட்டதாகக் கொள்ளப்படுகிறது.[1][2][3]

  • அரச்சலூரில் வாழ்ந்த கொடையாளி மலையவண்ணக்கன் என்னும் செய்தி கல்வெட்டில் காணப்படுகிறது.[4]
Remove ads

அடிக்குறிறிப்பு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads