வாரம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வாரம் என்பது பின்வரும் ஒன்றாக இருக்கலாம்:
- கிழமை, 7 நாள் கொண்ட தொகுதி.[1]
- ஆவாரம்பூ ஆனிரைகள் விரும்பி உண்ணாமல் மேலோட்டமாக ஒதுக்கும் பூ
- ஆடுதின்னாப்பாலை என்னும் ஒரு மூலிகைத் தாவரம்.
- சங்ககால நூல்களில் வாரம்
- பகுப்பில் ஒரு தொகுப்பு
வாரம் என்னும் சொல் ஒரு தொகுப்புப் பகுதியை உணர்த்தும். இதனைத் தொல்காப்பியம் ‘உறழ்ச்சி வாரம்’ எனக் குறிப்பிடுகிறது. இரண்டு தமிழ்ச்சொற்கள் ஒன்று சேரும் புணர்ச்சியில் அந்தச் சொற்கள் திரிந்தும் திரியாமலும் வரும் புணர்ச்சிப் பாங்கை ‘உறழ்ச்சி’ என்பர்.[2]
- கலிப்பா உறுப்பு
வாரம் என்பது கலிப்பாவில் தொகுத்துக் கூறும் முடிவுரைப் பாவுருப்பு. வண்ணகக் கலிப்பாவில் தரவு, தாழிசை, எண், வாரம் என்னும் உறுப்புகள் இருக்கும்.[3][4][5][6] இந்த வாரத்தைப் யாப்பருங்கலம் முதலான நூல்கள் சுரிதகம் எனக் குறிப்பிடுகின்றன.
- ஒருதலைப் பேச்சு
வாரம் என்பது ஒருதலைப் பேச்சு. அவையில் நண்பரோடு சேர்ந்து அவர் பக்கமாக, ஒருதலையாகப் பேசக்கூடாது.[7]
- கைமுத்திரை
வாரம் என்பது நாட்டியம் ஆடுபவல் காட்டும் கைமுத்திரைகளில் ஒன்று.[8]
- பின்பாட்டு
வாரம் என்பது பின்பாட்டு. தோரிய மடந்தை வாரம் பாடல்[9] வாரம் என்னும் சொல் இக்காலத்தில் பங்குபோட்டுக்கொள்ளுதலை உணர்த்தும். உழவர்கள் நிலத்தில் விளையும் கண்டுமுதலை நில-உடைமையாளர்க்குப் பாதி, உழுது பயிரிடுவோருக்குப் பாதி எனப் பங்கு போட்டுக்கொள்ளுதலை வாரம் என்பர்.
Remove ads
அடிக்குறிப்பு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads