விகாரமகாதேவி பூங்கா

இலங்கையின் கொழும்பு நகரில் உள்ளது From Wikipedia, the free encyclopedia

விகாரமகாதேவி பூங்காmap
Remove ads

விகாரமகாதேவி பூங்கா (Viharamahadevi Park) என்பது இலங்கையின் கொழும்பு நகரத்தில் உள்ள மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய பூங்காவாகும். முன்னதாக விக்டோரியா பூங்கா என்ற பெயரில் அழைக்கப்பட்டது. இலங்கையின் காலனித்துவ கால நகர மண்டபத்திற்கு முன்னால் கொழும்பில் உள்ள கறுவாத் தோட்டத்தில் ஒரு பொதுப் பூங்காவாக இது அமைந்துள்ளது. பிரித்தானிய காலனித்துவ நிர்வாகத்தால் இப்பூங்கா உருவாக்கப்பட்டது. முதலில் விக்டோரியா ராணியின் நினைவாக "விக்டோரியா பூங்கா" என்று பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டு வந்தது. ஆனால் 1958 ஆம் ஆண்டு சூலை மாதம் 18 ஆம் தேதி முதல் துட்டுகமுனுவின் தாயார் ராணி விகாரமகாதேவியின் பெயரால் அழைக்கப்பட்டு வருகிறது.[1]

விரைவான உண்மைகள் விகாரமகாதேவி பூங்கா Viharamahadevi Park, வகை ...

இரண்டாம் உலகப் போரின் போது, ​​விக்டோரியா பூங்காவை தளமாகக் கொண்ட ஆத்திரேலிய 17 ஆவது படைப்பிரிவுடன் பிரித்தானிய இராணுவம் பூங்காவை ஆக்கிரமித்தது. போருக்குப் பிறகு பூங்கா மீட்டெடுக்கப்பட்டு 1951 ஆம் ஆண்டில் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது.

விகாரமகாதேவி பூங்காவில் ஒரு துடுப்பாட்ட விளையாட்டரங்கம் இருந்தது. இங்கு 1927 மற்றும் 1995ஆம் ஆண்டுகளுக்கு இடையில் முதல் தர துடுப்பாட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இலங்கை 1927 ஆம் ஆண்டில் இங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணிக்கு எதிராகவும், 1935 ஆம் ஆண்டில் ஆத்திரேலிய அணிக்கு எதிராகவும் விளையாடியது.[2]

Thumb
விகாரமகாதேவி பூங்கா

இந்தப் பூங்காவில், முதலில் இருந்த விக்டோரியா மகாராணியின் சிலைக்குப் பதிலாக ஒரு பெரிய புத்தர் சிலையும் தொடர்ச்சியாக நீர் வரும் நீரூற்றுகளும் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு சிறு மிருகக்காட்சிசாலை, குழந்தைகள் விளையாட்டுப் பகுதி மற்றும் ஒரு தாரை பயிற்சி விமானம் ஆகியவைவும் இங்குள்ளன.[3] பூங்காவில் அமெரிக்க மசுகோவி வாத்துகள் உள்ளன. அவை செயற்கை ஏரியில் நீந்தி அதன் அருகிலுள்ள புல்லில் நடக்கின்றன.[4]

கொழும்பு நகரத்தில் உள்ள ஒரே பெரிய அளவிலான பொது பூங்கா விகாரமகாதேவி பூங்கா ஆகும், கொழும்பு நகராட்சி மன்றம் இப்பூங்காவை பராமரிக்கிறது. இதன் மேற்கு முனையில் கொழும்பு செனோடாஃப் போர் நினைவுச்சின்னமும் கொழும்பு பொது நூலகமும் உள்ளன. விகாரமகாதேவி பூங்கா திறந்தவெளி அரங்கம் இசை நிகழ்ச்சிகள் மற்றும் பொது நிகழ்வுகளுக்கான இடமாகவும் திகழ்கிறது.

Remove ads

மேற்கோள்கள்

நாட்டு வரைபடம்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads