விசுவப்பிரம்மம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

விஸ்வப்பிரம்மம் என்பவர் ஐந்து விஸ்வகர்ம ரிஷிகளை உலக நன்மைக்காக உருவாக்கியவர். பிரம்மம் என்றால் தொடக்கம், ஆக்கம், எல்லையில்லாத என்று பொருள்தரும். [1] எனவே உலகத்தின் தொடக்கத்தில் படைப்பு தொழில் செய்ய ஐந்து முகங்களிலிருந்தும் ஐந்து ரிசிகளை உருவாக்கியவர் என்பதால் விஸ்வ பிரம்மம் என்று அறியப்படுகிறார். சிவபெருமான் சதாசிவ ரூபத்தில் ஐந்து தலைகளுடன் இருப்பதைப் போல இந்த விஸ்வப்பிரம்ம ரூபத்திலும் ஐந்து தலைகளுடன் காணப்படுகிறார். இவர் விராட் விஸ்வப்பிரம்மம் என்றும் அறியப்படுகிறார்.

Remove ads

உருவம்

ஐந்து முகங்களையும், பத்து கைகளையும், நாகாபரணம் மற்றும் புலியுடை தரித்து விஸ்வபிரம்மம் காட்சியளிக்கிறார். அவர் வலது கைகளில் சூலம், சக்கரம், அம்பு, நாகாபரணம், மாலை ஆகியவையும், இடது கைகளில் நாக உடுக்கை, சங்கு, வில், வீணை ஆகியவற்றுடன் செந்தாமரையில் வீற்றிருக்கிறார். அவர் உருவாக்கிய ஐந்து விஸ்வகர்மா ரிசிகளும் அவரிடம் படைப்பு கலையை கற்றுக் கொண்டிருக்கின்றனர்.

சிவமுகம் திசை ரூபம் ரிசி வேதம்
சத்யோஜாதகம் கிழக்கு உருத்திரன் சானக ரிஷி மற்றும் மனு ரிக் வேதம்
வாம தேவம் தெற்கு திருமால் சனாதனரிஷி மற்றும் மயா யஜூர் வேதம்
அகோரம் மேற்கு பிரம்மன் அபுவனஸரிஷி மற்றும் துவஷ்டா சாம வேதம்
தற்புருசம் வடக்கு இந்திரன் பிரத்தனஸரிஷி மற்றும் ஸில்பி அதர்வண வேதம்
ஈசானம் ஆகாயம் ஸூர்ய சுபர்ணரிஷி மற்றும் விஸ்வக்ஞ பிரணவ வேதம்
Remove ads

விஸ்வபிரம்ம துதி

பஞ்சவர்ணம் கொஞ்சுமுகம்ஐந்துபேர்கள்
பரம்னுடைய திருக்கண்ணில் உதயமானார்
கொஞ்சிவரும் கிளி மொழியாள் உமையாள் புத்திரர்
குருவான மனு-மயா-துவஷ்ட-சிற்பி-விஸ்வங்

மேற்கோள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads