விவேகானந்தா மருத்துவ அறிவியல் நிறுவனம், கொல்கத்தா

இந்திய மருத்துவமனை From Wikipedia, the free encyclopedia

விவேகானந்தா மருத்துவ அறிவியல் நிறுவனம், கொல்கத்தா
Remove ads

விவேகானந்தா மருத்துவ அறிவியல் நிறுவனம் (Vivekananda Institute of Medical Sciences, Kolkata) இந்தியாவின் கொல்கத்தா சரத் போசு சாலையில் உள்ள ஒரு மருத்துவ நிறுவனம் மற்றும் மருத்துவமனை ஆகும். இது இராமகிருட்டிண மடம் மற்றும் ராமகிருட்டிணா அறக்கட்டளையின் கீழ் செயல்படுகிறது. சாரதா தேவியின் சீடரான சுவாமி தயானந்தால் 1932ஆம் ஆண்டு சூலை மாதம் சிசுமங்கல் பிரதிசுடானம், மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனையாக இது தொடங்கப்பட்டது.[1][2]

விரைவான உண்மைகள் வகை, உருவாக்கம் ...

சுவாமி தயானந்தா (பிறப்பு விமல்) ராமகிருட்டிண மடம் மற்றும் ராமகிருட்டிணா அறக்கட்டளையின் (1962-1965) ஒன்பதாவது தலைவரான சுவாமி மாதவானந்தாவின் தம்பி ஆவார்.[3] 1956ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட சிகிச்சையகம் தற்போதைய மருத்துவமனைக்கு வழி வகுத்தது. இன்று இந்நிறுவனம் 600 படுக்கைகள் கொண்ட பொது மருத்துவமனை, மா சாரதா செவிலியர் பள்ளி, விவேகானந்தா மருத்துவ அறிவியல் கழகம், கிராமப்புறங்களில் நடமாடும் சுகாதார அலகுகள் மற்றும் சமூக சுகாதார சேவைகள் என பல அமைப்புகளுடன் செயல்படுகிறது.[2]

Remove ads

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads