வெ. கிருட்டிணசாமி ராவ்
இந்திய ஆட்சிப் பணியாளர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
திவான் பகதூர் காஞ்சி வெ. கிருஷ்ணசாமி ராவ் (Kanchi Krishnaswamy Rao) (1845-1923) இவர் ஓர் இந்திய அரசு ஊழியரும், நீதிபதியும் மற்றும் நிர்வாகியுமாவார். இவர் 1898 முதல் 1904 வரை திருவிதாங்கூரின் திவானாகப் பணியாற்றினார்.
Remove ads
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி
கிருட்டிணசாமி ராவ் 1845 செப்டம்பரில் தமிழ்நாட்டின் சேலத்தில் ஒரு தேசஸ்த் பிராமணக் குடும்பத்தில் பிறந்தார்.[1] இவரது தந்தை காஞ்சி வெங்கட ராவ் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தலைமை வருவாய் கணக்காளராகப் பணியாற்றினார். இவர் தனது பதினாறு வயதில் மெட்ரிகுலேசனை முடித்தவுடன், அரசாங்க சேவையில் நுழைந்தார்.
தொழில்
கிருட்டிணசாமி ராவ் 1864 அக்டோபரில் நெல்லூர் மாவட்ட நீதிமன்றத்தில் பதிவறை எழுத்தராக ரூ. 20 ரூபாய் ஊதியத்தில் பணியில் சேர்ந்தார். 1867 ஆம் ஆண்டில், இவர் தனது திறமையினால் பதவி உயர்வு பெற்றார். பின்னர், 1870 சூலையில் ஒரு மாவட்ட ஆய்வாளர் ஆனார். 1883 இல், இவர் காக்கிநாடாவில் துணை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். மே 1894 இல், அப்போதைய மகாராஜாவால் திருவிதாங்கூர் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர், 1898இல் திவானாக நியமிக்கப்பட்டார்.
நவம்பர் 1901 இல் இவர் இந்தியப் பேரரசின் தோழராக நியமிக்கப்பட்டார்.
Remove ads
இறப்பு
கிருட்டிணசாமி ராவ் 1923 இல் இறந்தார்.[2]
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads