வேலூர் வானூர்தி நிலையம்

தமிழ்நாட்டிலுள்ள ஒரு வானூர்தி நிலையம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

வேலூர் வானூர்தி நிலையம் (Vellore Airport, (ஐசிஏஓ: VOVR) தமிழ்நாட்டின் வேலூர் நகரத்திற்கு மேற்கே 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஓர் வானூர்தித் தடமாகும். 51.5 ஏக்கர்களில் (208,000 சதுர மீட்டர்கள்) அமைந்துள்ள இந்த வானூர்தித் தடம் மதராசு பிளையிங் கிளப்பின் பயிற்சி விமானிகளுக்காக சூலை 2006இல் மீண்டும் செயலாக்கத்திற்கு வந்தது.[1] சென்னை வானூர்தி நிலையத்தில் வணிக வான்வழித் தடங்களின் பெருக்கத்தால் அங்கு இயங்கி வந்த கிளப்பின் செயல்பாடு மார்ச்சு 2011இல் நிறுத்தப்பட்டது.[2] இதற்கு மாற்றாக இங்கு முனையக் கட்டிடங்கள் கட்டித் தர தமிழ்நாடு அரசு முன்வந்தது. 2009ஆம் ஆண்டிற்குள் 45 இருக்கைகள் கொண்ட ஏடிஆர் வானூர்திகள் இயங்கும் வண்ணம் இவற்றைக் கட்டி முடிக்கத் திட்டமிடப்பட்டது. இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையத்தின் (AAI) தென் மண்டல "முடங்கிய வான்நிலையங்களின் மீள்செயலாக்கத் திட்டத்தில்" வேலூர் சேர்க்கப்பட்டுள்ளது.[3]

விரைவான உண்மைகள் வேலூர் வானூர்தி நிலையம் Vellore Airport, சுருக்கமான விபரம் ...
Remove ads

வான்வழிச் சேவைகளும் சேரிடங்களும்

தற்போது யாதொரு வணிகச் சேவையும் இங்கிருந்து இயங்கவில்லை.

சிரீ இராசீவ் காந்தி வான்வழி அறிவியல் கழகம் மற்றும் விமானிகள் பயிற்சி அகாதமி

வேலூர் வானூர்தி நிலையத்தின் விரிவாக்கத் திட்டத்தின் அங்கமாக அரசு சிரீ இராசீவ் காந்தி வான்வழி அறிவியல் கழகம் மற்றும் விமானிகள் பயிற்சி அகாதமியை இங்கு நிறுவ உள்ளது. தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகம் இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையத்தின் ஒத்துழைப்புடன் இதற்கானப் பணியை மேற்கொள்ளும்.[4]

சான்றுகோள்கள்

வெளி இணைப்புகள்

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads