ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி (Sri Shanmuga Hindu Ladies' College) இலங்கையின் திருகோணமலை நகரப் பகுதியில் அமைந்துள்ள ஒரு பாடசாலை ஆகும். இது நகரின் பிரபலமான பெண்கள்பாடசாலையாகவும் இந்துப் பாரம்பரியங்களைக் கடைப்பிடிக்கும் பாடசாலையாகவும் திகழ்கின்றது.
Remove ads
வரலாறு
சண்முகா இந்து மகளிர் கல்லூரியை ஆரம்பித்தவர் தம்பலகாமம், பட்டிமேடு என்ற ஊரைச் சேர்ந்த தங்கம்மா சண்முகம்பிள்ளை (15 ஆகத்து 1863 - 2 மே 1953). பெண்களுக்கான கல்வி மீதிருந்த ஆர்வத்தால் தனது காலஞ்சென்ற கணவரின் பெயரில் 1923 அக்டோபர் 20 இல்[1] 16 மாணவிகளுடனும் இரண்டு ஆசிரியர்களையும் கொண்டு சண்முக சைவ மகளிர் பாடசாலையை உருவாக்கினார். இப்பாடசாலையின் ஆங்கில மொழிப் பகுதி சேர் பொன்னம்பலம் இராமநாதனால் திறந்து வைக்கப்பட்டது.[1] பாடசாலைப் பண் சுன்னாகம் குமாரசாமிப் புலவரினால் இயற்றப்பட்டது.[1] பாடசாலையின் கட்டிடம் சகல நிர்வாக செலவுகளையும் தானே தனது சொத்துக்களை வழங்கி செலவு செய்தார். அந்நேரத்தில் தூர இடங்களில் இருந்துவரும் மாணவிகளுக்காக 1932 இல் மாணவியர் விடுதி ஒன்றையும் அமைத்துக் கொடுத்தார். தனக்குப் பின்னர் பாடசாலையை நிர்வகிப்பதற்காக தர்மகத்தாவாக தனது பெறாமகன நீதிபதி நா. கிருஸ்ணதாசனை 1949 இல் நியமித்தார். இன்று 120 ஆசிரியர்களுடனும் 2200 மாணவிகளுடனும் இப்பாடசாலை திகழ்கின்றது.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads