ஹபிகஞ்ச் மாவட்டம்
வங்காளதேசத்தின் சில்ஹெட் கோட்டத்திலுள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஹபிகஞ்ச் மாவட்டம் (Habiganj District) (হবিগঞ্জ), தெற்காசியாவின் வங்காளதேச நாட்டின் அறுபத்தி நான்கு மாவட்டங்களில் ஒன்றாகும். கிழக்கு வங்கதேசத்தில் அமைந்த இம்மாவட்டம் சில்ஹெட் கோட்டத்தில் உள்ளது. இதன் நிர்வாகத் தலைமையிடம் ஹபிகன்ஞ் நகரம் ஆகும்.

மாவட்ட எல்லைகள்
2,636.59 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட ஹபிகஞ்ச் மாவட்டத்தின் வடக்கில் சுனாம்கஞ்ச் மாவட்டம், கிழக்கில் இந்தியாவின் திரிபுரா மாநிலம் மற்றும் மௌலிபஜார் மாவட்டம், வடகிழக்கில் சில்ஹெட் மாவட்டத்தின் பாலாகஞ்ச் துணை மாவட்டம், மேற்கில் கிசோர்கஞ்ச் மாவட்டம் மற்றும் பிரம்மன்பரியா மாவட்டங்கள் எல்லைகளாகக் கொண்டது.
மாவட்ட நிர்வாகம்
ஹபிகஞ்ச் மாவட்டம், அஜ்மீரிகஞ்ச், பனியாகஞ்ச், பாஹுபால், சுனாருகாட், ஹபிப்கஞ்ச் சதர், லக்காய், மத்தாப்பூர் மற்றும் நபிகஞ்ச் என எட்டு துணை மாவட்டங்களைக் கொண்டுள்ளது. மேலும் ஆறு நகராட்சிகளையும், 77 ஊராட்சி ஒன்றியங்களையும், 2142 கிராமங்களையும் கொண்டுள்ளது.[1]
மக்கள் தொகையியல்
2636.59 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட இம்மாவட்டத்தின் 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி (இறுதி முடிவு அறிவிக்கப்படவில்லை) மக்கள் தொகை 20,89,001 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 10,25,591 ஆகவும், பெண்கள் 9 10,63,410 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் 99 ஆண்களுக்கு பெண்கள் 100 வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 792 நபர்கள் வீதம் வாழ்கின்றனர். சராசரி எழுத்தறிவு 40.5% ஆக உள்ளது.[2] மக்கள் தொகையில் வங்காள மொழி பேசுவோர் 98% ஆகவும், இரண்டு விழுக்காடு பிகாரி மக்கள், காசி மக்கள், மணிப்புரி மக்கள் மற்றும் திரிபுரி மக்கள் உள்ளனர்.
நிலங்கள்
இம்மாவட்டத்தின் மொத்த நிலத்தில் 1,54,953 ஹெக்டேர் (60.22%) பரப்பளவு வேளாண்மை நிலங்களாகவும், 95 11,644 ஹெக்டேர் நிலங்கள் (4.53%) காடுகளாக உள்ளது 51.6% நிலங்கள் ஒரு போக சாகுபடியாகவும், 38.7% நிலங்கள் இருபோக சாகுபடி நிலங்களாகவும், 9.7 நிலங்கள் முப்போக சாகுபடி நிலங்களாகவும், 521 ஹெக்டேர் நிலங்கள் தரிசு நிலங்களாக உள்ளது. இம்மாவட்டத்தில் பராக், பேராமகானா, கோபாலா, கல்னி, காளிசிறீ, கொராங்கி, குஷியாரா, மெக்னா, ரத்தினா, சுத்கி, சோனை, கோவாய், சுதாங் முதலிய ஆறுகள் பாய்கிறது.
பொருளாதாரம்
இம்மாவட்டத்தில் 15,703.24 ஹெக்டேர் பரப்பளவில் தேயிலைத் தோட்டங்களும், 4204 ஏக்கர் இரப்பர் தோட்டங்களும் உள்ளது. ஹபிகஞ்ச் மாவட்டத்தின் ரசீத்பூர், பிபியான, ஹபிகஞ்ச் இயற்கை எரிவாயு சுரங்கங்களிலிருந்து 5.5 டிரில்லியன் கன அடி இருப்பு உள்ளது.
கல்வி
கல்வி
வங்காளதேசத்தின் பிற மாவட்டங்களைப் போன்று, இம்மாவட்டத்திலும் நான்கு படிகள் கொண்ட கல்வி அமைப்புகள் உள்ளது. அவைகள்: ஐந்தாண்டு படிப்புகள் கொண்ட தொடக்கப்பள்ளிகளும் [தரம் 1 – 5], ஐந்தாண்டு படிப்புகள் கொண்ட இடைநிலைக் கல்வியும், [தரம் 6 – 10], இரண்டாண்டு படிப்பு கொண்ட மேனிலைப்பள்ளிகளும் [தரம் 11 – 12], நான்கு ஆண்டு படிப்பு கொண்ட இளநிலை பட்டப்படிப்பு மற்றும் ஒராண்டு கால முதுநிலை பட்டப்படிப்பு கொண்ட பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் உள்ளது. வங்காள மொழியுடன், ஆங்கில மொழியும் அனைத்து நிலைகளிலும் கற்பிக்கப்படுகிறது.
இம்மாவட்டம் 16 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும், ஆறு அரசு மற்றும் 99 அரசல்லாத உயர்நிலைப் பள்ளிகளும், 732 அரசு தொடக்கப் பள்ளிகளும், 711 தனியார் தொடக்கப் பள்ளிகளும் கொண்டுள்ளது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads