Map Graph

அமரவிளா இராமேசுவரம் மகாதேவர் கோயில்

அமரவிளா இராமேசுவரம் சிறீ மகாதேவர் கோயில் என்பது சிவனுக்கு அமைக்கப்பட்ட ஒரு பழங்கால இந்துக் கோயில் ஆகும். இது இந்தியாவின் கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள நெய்யாற்றிங்கரை வட்டத்தின் அமரவிளாவில் நெய்யாறு கரையில் அமைந்துள்ளது. கோயிலின் பிரதான தெய்வம் மேற்கு நோக்கி இராமேசுவரத்தை எதிர்கொள்ளும் வகையில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் கேரளாவின் 108 சிவ ஆலயங்களில் ஒன்றாகும். இந்தக் கோயில் பரசுராமரால் நிறுவப்பட்டுள்ளது என்று நம்பப்படுகிறது. அமரவிளா கிராமத்தில் உள்ள நெய்யாற்றிங்கரை நகரத்திலிருந்து 6 கி.மீ தூரத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது. 108 சிவாலய தளத்தில் உள்ள இரண்டு இராமேசுவரம் கோயில்களில் இதுவும் ஒன்றாகும். கொல்லம் இராமேசுவரம் மகாதேவர் கோயில் இரண்டாவது இராமேசுவரம் கோயில். இந்த கோயில் கொல்லம் நகரில் அமைந்துள்ளது.

Read article
படிமம்:അമരവിള_രാമേശ്വരം_മഹാദേവക്ഷേത്രം.jpg