கோபால்பூர் விலங்குக் காட்சிச்சாலை
கோபால்பூர் விலங்குக் காட்சிச்சாலை, என்பது இந்தியாவின் இமாச்சலப் பிரதேசம், காங்ரா மாவட்டத்தில் தரம்சாலா - பாலம்பூர் சாலையில் உள்ள கோபால்பூர் கிராமத்தில் அமைந்துள்ள ஒரு உயிரியல் பூங்காவாகும். இது இமயமலையின் தௌலாதர் மலைத்தொடரால் சூழப்பட்டுள்ளது. விலங்குக் காட்சிசாலையானது மேப்பிள் மரங்கள், குதிரை செஸ்நட் மரங்களால் சூழப்பட்டு குளிர்ச்சியுடன் பசுமையாக அமைந்துள்ளது. இந்த மிருகக்காட்சிசாலையில் காணப்படும் முக்கிய விலங்குகள்: ஆசியச் சிங்கம், சிறுத்தை, இமயமலை கருப்புக் கரடி, கடமான், கேளையாடு, கோரல், காட்டுப் பன்றி, பூட்டான் சாம்பல் மயில்கள், சீர் பெசன்ட், சிவப்பு காட்டுக் கோழி,மயில், பிணந்தின்னிக் கழுகு, பருந்துகள் போன்றவை.
Read article