கோபால்பூர் விலங்குக் காட்சிச்சாலை

From Wikipedia, the free encyclopedia

கோபால்பூர் விலங்குக் காட்சிச்சாலை
Remove ads

கோபால்பூர் விலங்குக் காட்சிச்சாலை (Gopalpur Zoo), என்பது இந்தியாவின் இமாச்சலப் பிரதேசம், காங்ரா மாவட்டத்தில் தரம்சாலா - பாலம்பூர் சாலையில் உள்ள கோபால்பூர் கிராமத்தில் அமைந்துள்ள ஒரு உயிரியல் பூங்காவாகும். இது இமயமலையின் தௌலாதர் மலைத்தொடரால் சூழப்பட்டுள்ளது. விலங்குக் காட்சிசாலையானது மேப்பிள் மரங்கள், குதிரை செஸ்நட் மரங்களால் சூழப்பட்டு குளிர்ச்சியுடன் பசுமையாக அமைந்துள்ளது.[1] இந்த மிருகக்காட்சிசாலையில் காணப்படும் முக்கிய விலங்குகள்: ஆசியச் சிங்கம், சிறுத்தை, இமயமலை கருப்புக் கரடி, கடமான், கேளையாடு, கோரல், காட்டுப் பன்றி, பூட்டான் சாம்பல் மயில்கள், சீர் பெசன்ட், சிவப்பு காட்டுக் கோழி,மயில், பிணந்தின்னிக் கழுகு, பருந்துகள் போன்றவை.

Thumb
காங்க்ரா பள்ளத்தாக்கிலிருந்து இமயமலையின் தௌலதார் தொடர்
விரைவான உண்மைகள் கோபால்பூர் விலங்குக் காட்சிச்சாலை, அமைவிடம் ...
Remove ads

இமாச்சல பிரதேச உயிரியல் பூங்காக்கள் மற்றும் பறவைகள்

கோபால்பூர், ரேணுகா மற்றும் குப்ரி ஆகிய இடங்களில் மூன்று அங்கீகரிக்கப்பட்ட விலங்கியல் பூங்காக்களும் சிம்லா, சரஹான் மற்றும் சைல் ஆகிய இடங்களில் மூன்று பறவை காட்சியகங்களும் உள்ளன.

இமாச்சல பிரதேச தேசிய பூங்காக்கள்

  1. பெரிய இமாலய தேசியப் பூங்கா, குல்லு மாவட்டம்: பகுதி 765 கி.மீ 2
  2. ஊசி பள்ளத்தாக்கு தேசிய பூங்கா, லாஹெளல் மற்றும் ஸ்பிதி மாவட்டம் : பகுதி 675 கி.மீ. 2

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads