Map Graph

சசியித்லு கடற்கரை

சசியித்லு கடற்கரை இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூரு நகரத்தின் வடக்கே அமைந்துள்ள சசியித்லு கிராமத்தில் அமைந்துள்ளது. தாய்பிட்டில் கடற்கரை என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. சசியித்லு கடற்கரை தேசிய நெடுஞ்சாலை 66 என்ற சாலையின் மேற்கே சுமார் 6 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. பவஞ்சே ஆறு, சாம்பவி ஆற்றின் உப்பங்கழிகளால் இக்கடற்கரை சூழப்பட்டுள்ளது. இரண்டு ஆறுகளும் கடற்கரையில் சந்திக்கின்றன. இது மங்களூரின் வேகமாக வளர்ந்து வரும் பகுதிகளில் ஒன்றான முக்காவிற்கு அருகில் உள்ளது. இந்த கடற்கரையில் 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் அகில இந்திய அளவிலான அலைச்சறுக்கு போட்டிகள் நடந்தன.

Read article