சசியித்லு கடற்கரை

From Wikipedia, the free encyclopedia

Remove ads

சசியித்லு கடற்கரை (Sasihithlu beach) இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூரு நகரத்தின் வடக்கே அமைந்துள்ள சசியித்லு கிராமத்தில் அமைந்துள்ளது. தாய்பிட்டில் கடற்கரை என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது.[1] சசியித்லு கடற்கரை தேசிய நெடுஞ்சாலை 66 என்ற சாலையின் மேற்கே சுமார் 6 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.[2] பவஞ்சே ஆறு, சாம்பவி ஆற்றின் உப்பங்கழிகளால் இக்கடற்கரை சூழப்பட்டுள்ளது. இரண்டு ஆறுகளும் கடற்கரையில் சந்திக்கின்றன. இது மங்களூரின் வேகமாக வளர்ந்து வரும் பகுதிகளில் ஒன்றான முக்காவிற்கு அருகில் உள்ளது.[2] இந்த கடற்கரையில் 2016 [3]மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் அகில இந்திய அளவிலான அலைச்சறுக்கு போட்டிகள் நடந்தன.[4]

விரைவான உண்மைகள் சசியித்லு கடற்கரைSasihithlu Beach, நாடு ...
Remove ads

போக்குவரத்து

சசியித்லு கடற்கரை பொது போக்குவரத்து மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. பாரத மாநில வங்கி அருகிலுள்ள பிரதான பேருந்து நிறுத்தத்திலிருந்தும் நகரத்தின் பிற பகுதிகளிலிருந்தும் பல நகரப் பேருந்துகள் (2,2ஏ) உள்ளன. சசியித்லு கடற்கரைக்கு முக்காவில் நிறுத்தும் விரைவுவண்டி அல்லாத பேருந்துகளிலும் செல்லலாம். பேருந்தில் இருந்து இறங்கியவுடன், ஒருவர் வாடகை வாகனத்திலும் சசியித்லு கடற்கரையை அடையலாம்.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads