Map Graph

மும்பை கடற்கரை உலாச்சாலை

கடற்கரை உலாச்சாலை இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தில் மும்பை நகரத்தின் தென்கோடியில் நாரிமன் முனையில் அமைந்துள்ளது. அரபுக் கடலை ஒட்டிய இந்த 'C' வடிவ காங்கிரீட் உலாச்சாலை 3 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. இந்த கடற்கரை உலாச்சாலை, வடகோடியில் கிர்கோன் சௌபாத்தி மற்றும் தென்கோடியில் நாரிமன் முனையையும் இணைக்கிறது. இதன் வடகோடியில் மலபார் மலை உள்ளது. இந்த உலாச்சாலை மேற்கு - தென்மேற்கு வழியாகச் செல்கிறது. கடற்கரை உலாச்சாலையை இராணியின் கழுத்தணி என்று அழைப்பர். ஏனெனில், இரவு நேரத்தில் கடற்கரை உலாச்சாலையை உயரமான இடத்தில் இருந்து பார்க்கும் போது, தெரு விளக்குகள் வெளிச்சத்தில் முத்து சரம் போல காட்சியளிக்கும்.

Read article
படிமம்:Marine_Drive,_Mumbai_(2007).jpgபடிமம்:Mumbai_area_locator_map.svgபடிமம்:Mumbai_03-2016_27_skyline_at_Marine_Drive.jpgபடிமம்:Commons-logo-2.svg