லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக நிறுவனம்
லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக நிறுவனம் என்பது இந்தியாவில் பொதுச் சேவை மற்றும் பொது நிர்வாகம் குறித்த குடிமை சேவை பயிற்சி நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் முக்கிய நோக்கம் இந்திய ஆட்சிப் பணி நிலை அரசு ஊழியர்களுக்குப் பயிற்சி அளிப்பதும், குழு-ஏ மத்திய குடிமைப் பணி அமைப்பு பாடநெறியை நடத்துவதும் ஆகும். பயிற்சி முடிந்ததும், இந்திய ஆட்சிப் பணி நிலை பயிற்சி அதிகாரிகளுக்குத் தில்லியின் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் எம். ஏ. பட்டம் வழங்கப்படுகிறது. இது 1985 முதல் மத்தியப் பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியம் அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.
Read article