லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக நிறுவனம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக நிறுவனம் (Lal Bahadur Shastri National Academy of Administration) என்பது இந்தியாவில் பொதுச் சேவை மற்றும் பொது நிர்வாகம் குறித்த குடிமை சேவை பயிற்சி நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் முக்கிய நோக்கம் இந்திய ஆட்சிப் பணி நிலை அரசு ஊழியர்களுக்குப் பயிற்சி அளிப்பதும், குழு-ஏ மத்திய குடிமைப் பணி அமைப்பு பாடநெறியை நடத்துவதும் ஆகும். பயிற்சி முடிந்ததும், இந்திய ஆட்சிப் பணி நிலை பயிற்சி அதிகாரிகளுக்குத் தில்லியின் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் எம். ஏ. (பொது மேலாண்மை) பட்டம் வழங்கப்படுகிறது. இது 1985 முதல் மத்தியப் பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியம் அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.

விரைவான உண்மைகள் முந்தைய பெயர், குறிக்கோளுரை ...
Remove ads

கண்ணோட்டம்

Thumb
சிறப்பு அஞ்சல் முத்திரை, 2009ஆம் ஆண்டு

இந்தியாவில், நாட்டின் முதன்மையான பொதுட் சேவைகளின் பெரும்பாலான அதிகாரிகள் ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நிர்வகிக்கப்படும் இந்தியக் குடியியல் பணிகள் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பதாரர்கள் நான்கு மாத அடிப்படை பாடத்திட்டத்தின் மூலம், அனைத்து பயிற்சியாளர்களிடையேயும் "சமத்துவம்" என்ற உணர்வு அறிமுகப்படுத்தப்படுகிறது.

Thumb
முசோரியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக கழகம்

இதன் பின்னர், இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் இந்தப் பயிற்சி நிறுவனத்தில் தங்கள் தொழில்முறை பயிற்சியைத் தொடர்கின்றனர். அதே நேரத்தில் மற்ற சேவைகளின் அதிகாரிகள் இந்திய வெளியுறவு சேவை அதிகாரிகளுக்காகப் புதுதில்லியில் உள்ள சுஷ்மா சுவராஜ் வெளிநாட்டுச் சேவை நிறுவனம் போன்ற அந்தந்த பணியாளர் கல்லூரிகளுக்குச் செல்கின்றனர். இந்தியக் காவல்துறை சேவை அதிகாரிகளுக்காக ஐதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய காவல் அகாதமி மற்றும் இந்திய வன சேவை அதிகாரிகளுக்காக தேராதூனில் உள்ள இந்திரா காந்தி தேசிய வன அகாதமி , தேசிய வருவாய் சேவை அதிகாரிகளுக்கான சுங்க மறைமுக வரி மற்றும் போதைப்பொருள் அகாதமி போன்றவை பயிற்சியளிக்கின்றன.

இந்த பயிற்சி நிறுவனம் 2007ஆம் ஆண்டில் இந்திய நிர்வாக சேவையின் அதிகாரிகளுக்கான இடைநிலை பணிக்கால பயிற்சி திட்டங்களையும் நடத்தத் தொடங்கியது. கூட்டுச் செயலாளர்களாக வரவிருக்கும் சுமார் 15 வருடப் பணி அனுபவம் உடைய அதிகாரிகள் நிலை IV மத்திய தொழில் பயிற்சித் திட்டத்திற்கு உட்படுகின்றனர். சுமார் எட்டு வருடச் சேவையுடன் கூடிய அதிகாரிகள் மூன்றாம் கட்ட இடைநிலை பணி பயிற்சி திட்டத்திற்கு உட்படுகின்றனர். பொது நிர்வாகத்தின் பல்வேறு அம்சங்களில் பல குறுகிய கால பயிற்சி திட்டங்களையும் இந்நிறுவனம் நடத்துகிறது.

இந்த அகாதமி பல ஆராய்ச்சி மையங்களின் ஆளுகை மற்றும் பொது நிர்வாகம் ஆகிய துறைகளில் ஆராய்ச்சிக்கு உதவுகிறது. இவற்றில் சில தன்னாட்சி தகுதியினைக் கொண்டுள்ளன. அகாதமியின் மிக முக்கியமான ஆராய்ச்சி மையம் நிர்வாக இயக்குநர் ஒருவர் தலைமையிலான தேசிய நிர்வாக ஆராய்ச்சி நிறுவனம் ஆகும். இந்த அகாதமியில் பேரிடர் மேலாண்மை மையம், ஊரக ஆய்வு மையம், பாலின மையம் மற்றும் கிராமிய கடன் மையம் ஆகியவற்றுடன் செயல்படுகிறது.

Remove ads

வசதிகள்

புதிதாகக் கட்டப்பட்ட ஆதர்ஷிலா மற்றும் கன்ஷிலா கட்டிடங்களில் ஆசிரிய மற்றும் பணியாளர் அலுவலகங்கள், கணினி மண்டபம் மற்றும் விரிவுரை அரங்குகள் உள்ளன. கலாச்சார நிகழ்ச்சிகளுக்கும் செயல்பாடுகளுக்கும் பயன்படுத்தப்படும் மிகப்பெரிய மத்திய மண்டபம் சம்பூர்ணானந்த் கலையரங்கத்துடன் கூடியது. இந்திரா பவன் வளாகம் முதன்மை வளாகத்திலிருந்து 1 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்குக் குறுகிய கால பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

இந்த கழகத்தில் பெரிய விளையாட்டு வளாகம், நூலகம், கணினி வசதிகள் மற்றும் ஒய்-ஃபை மற்றும் உறைவிட மாணவர்களுக்கான விடுதிகளும் உள்ளன.[1]

Remove ads

இயக்குநர்கள்

இந்தப் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர்களின் பட்டியலை 1959இல் தொடங்கியதிலிருந்து அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலதிகத் தகவல்கள் வ. எண், பெயர் ...

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads