Map Graph

விகாரமகாதேவி பூங்கா

இலங்கையின் கொழும்பு நகரில் உள்ளது

விகாரமகாதேவி பூங்கா என்பது இலங்கையின் கொழும்பு நகரத்தில் உள்ள மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய பூங்காவாகும். முன்னதாக விக்டோரியா பூங்கா என்ற பெயரில் அழைக்கப்பட்டது. இலங்கையின் காலனித்துவ கால நகர மண்டபத்திற்கு முன்னால் கொழும்பில் உள்ள கறுவாத் தோட்டத்தில் ஒரு பொதுப் பூங்காவாக இது அமைந்துள்ளது. பிரித்தானிய காலனித்துவ நிர்வாகத்தால் இப்பூங்கா உருவாக்கப்பட்டது. முதலில் விக்டோரியா ராணியின் நினைவாக "விக்டோரியா பூங்கா" என்று பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டு வந்தது. ஆனால் 1958 ஆம் ஆண்டு சூலை மாதம் 18 ஆம் தேதி முதல் துட்டுகமுனுவின் தாயார் ராணி விகாரமகாதேவியின் பெயரால் அழைக்கப்பட்டு வருகிறது.

Read article
படிமம்:Viharamahadevi_Park_incl._Town_Hall.jpgபடிமம்:Viharamahadevi_Park.jpg