அந்தராங் பாலின சுகாதார தகவல் கலைக்கூடம்
அந்தராங் பாலின சுகாதார தகவல் கலைக்கூடம் என்பது அந்தராங் அருங்காட்சியகம் என்றும் அழைக்கப்படுகிறது. இது மனித உடல், பாலியல் மற்றும் எயிட்சு பற்றி இளைஞர்களுக்கும் முதியவர்களுக்கும் கற்பிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்டது. தெற்காசியாவிலேயே உள்ள இந்த வகையான அருங்காட்சியகம் இதுவாகும். எயிட்சு நோயாளிகள் அதிகரித்ததைத் தொடர்ந்து பெருநகர மும்பை மாநகராட்சி மற்றும் மும்பை மாவட்ட எயிட்சு கட்டுப்பாட்டுச் சங்கம் & மருத்துவர் பிரகாஷ் சாரங் ஆகியோரின் கூட்டு முயற்சியின் விளைவாக 2002ஆம் ஆண்டு மும்பையில் இந்த அருங்காட்சியகம் நிறுவப்பட்டது. 2008ஆம் ஆண்டில், இந்த அருங்காட்சியகத்தினை சுற்றுலா நகரமான கோவாவுக்கு மாற்றத் திட்டமிடப்பட்டது, அங்கு சாரங் தனது பணிக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று நம்பினார். இருப்பினும், 2013ன் நிலவரப்படி, அது இன்னும் திறக்க வாய்ப்பில்லாமல் உள்ளது.