Map Graph

அபீசு அகமது கான் மசூதி

அபீசு அகமது கான் மசூதி தமிழ்நாடு, சென்னை, சேப்பாக்கம் பகுதியில் உள்ள காயிதே மில்லத் சாலையில் அமைந்துள்ளது. இதனை ஐஸ் அவுஸ் மசூதி என்றும் அழைப்பதுண்டு. இந்த மசூதி 1818 ஆம் ஆண்டு ஆபீசு அகமது கான் என்பவரால் கட்டப்பட்டது. இவர் முகமது அலி கான் வாலாஜாவின் அரசவையில் பணிபுரிந்த ஓர் அதிகாரியாவார். பஜ்ராம் ஜங் இவருடைய சகோதரர் ஆவார். சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள பஜ்ராம் ஜங் மசூதி இவர் பெயரில் அமைந்துள்ளது. ஆபீசு அகமது கான் மசூதி சென்னை விவேகானந்தர் இல்லத்தின் அருகே அமைந்துள்ளது.

Read article