Map Graph

கீழப்பாவூர் நரசிம்மர் கோயில்

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஒரு பெருமாள் கோயில்

கீழப்பாவூர் நரசிம்மர் கோயில் என்பது தமிழ்நாட்டில் அமைந்துள்ள நரசிம்ம தலங்களில் ஒன்று. இக்கோவில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம், கீழப்பாவூரில் அமைந்துள்ளது. நரசிம்மர் பதினாறு கரங்களுடன் காட்சியளிக்கிறார். இந்தியாவில், 16 கரங்களுடன் நரசிம்மர் காட்சி தரும் மூன்று தலங்களுள் இதுவும் ஒன்றாகும். மற்ற இரு கோயில்களில் ஒன்று இராஜஸ்தானிலும் மற்றொன்று தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்திலுள்ள சிங்கிரிகுடி அல்லது சிங்கர்குடி என்னும் ஊரிலும் அமைந்துள்ளன.

Read article