Map Graph

கோயம்புத்தூர் வடக்கு சந்திப்பு தொடருந்து நிலையம்

தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு தொடருந்து நிலையம்

கோயம்புத்தூர் வடக்கு தொடருந்து நிலையம் என்பது, இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்தில், 11°01′12.7″N 76°57′16.6″E என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, கடல் மட்டத்திலிருந்து சுமார் 453 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். கோயம்புத்தூர் சந்திப்பு தொடருந்து நிலையம் அமைந்துள்ள இடத்திலிருந்து, இந்நிலையம் சுமார் 3 கி.மீ. தூரத்தில் உள்ளது. தினமும் சுமார் 144 எண்ணிக்கையிலான தொடருந்துகள், இந்நிலையத்தைக் கடந்து செல்கின்றன. 2022 ஆம் ஆண்டு சூன் மாதம், இந்தியாவின் முதலாவது பாரத் கௌரவ் தொடருந்து, கோயம்புத்தூரிலிருந்து சீரடி நோக்கி பயணம் புறப்பட்டது இந்நிலையத்திலிருந்து தான். ரூ.3.62 கோடி செலவில், கோயம்புத்தூர் வடக்கு தொடருந்து நிலையத்தில், இரயில்வே நடைமேம்பாலம் நீட்டிப்பு பணிகளுக்கான ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

Read article