Map Graph

புதுநாப்பாளையம்

சென்னையின் புறநகர்

புதுநாப்பாளையம் (Pudhunaappaalayam) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள சென்னை பெருநகர நகரத்தின் வடக்கு புறநகர் கிராமப் பகுதியாகும். சென்னையின் வடக்கே மணலி புதுநகரில் இந்த குடியிருப்புப் பகுதி உள்ளது. 2011 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் முந்தைய இடையன்சாவடி கிராம பஞ்சாயத்து பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு, இப்பகுதி பெருநகர சென்னை மாநகராட்சியின் அதிகார வரம்பிற்குள் வந்தது. புதுநாப்பாளையம் பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டிருந்தாலும், அது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் தாலுகாவின் ஒரு பகுதியாகவே 2018 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 15 ஆம் தேதி வரை இருந்தது.

Read article